வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்கினால் மட்டும் அதிர்ஷ்டம் அல்ல! இந்த 1 பொருள் வாங்கினாலும் பெரும் அதிர்ஷ்டம் வருமாம் தெரியுமா?

lakshmi-salt-jaadi
- Advertisement -

வெள்ளிக்கிழமையில் பொதுவாக கல் உப்பை வாங்கி வைத்தால் குடும்பத்தில் மகாலட்சுமி கடாட்சம் நீடிக்கும், நிலைத்து நிற்கும் என்கிற ஒரு ஐதீகம் இருந்து வருகிறது. வீட்டில் எப்பொழுதும் நீக்கமற நிறைந்து இருக்க வேண்டிய ஒரு பொருளாக இந்த கல் உப்பு இருந்து வருகிறது. இது இருக்கும் இடங்களில் எல்லாம் அதிர்ஷ்ட மழை பொழியும், செல்வ சேர்க்கை உண்டாகும் என்றெல்லாம் நம்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளிக் கிழமையில் உப்பு மட்டுமல்லாமல், இந்த ஒரு பொருளையும் வாங்கினால் அதிர்ஷ்டத்திற்கு பஞ்சமே இருக்காது என்கிறது ஆன்மீகம். அப்படியான ஒரு ஆன்மீக குறிப்பு தகவலை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஆன்மீகத்தில் மட்டும் அல்லாமல் பொதுவாகவே நிறைய பொருட்களுக்கு மகாலட்சுமியின் அம்சம் இருப்பதாக ஐதீகம் உண்டு. அந்த பொருட்களை எல்லாம் நாம் அவமதிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. மகாலட்சுமி நீக்கமாற நிறைந்து இருக்கும் பொருட்களை அவமதித்தால் தோஷங்கள் ஏற்படும், இதனால் குடும்பத்தில் மட்டும் அல்லாமல் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு சங்கடங்களும், தோல்விகளும் வரக்கூடும்.

- Advertisement -

வீட்டை கூட்டும் துடைப்பத்திலிருந்து, கட்டு கட்டான ரூபாய் நோட்டுகள் வரை அனைத்திலும் மகாலட்சுமி இருக்கின்றாள். அந்த வகையில் கல் உப்பு, மஞ்சள் கிழங்கு, ஏலக்காய், நல்லெண்ணெய், அரிசி போன்றவற்றிலும் மகாலட்சுமி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இதனால் நாம் வெள்ளிக்கிழமையில் கல் உப்பு வாங்க வேண்டும் என்பது எப்படியோ, அதே போல வெள்ளிக் கிழமையின் பொழுது வாங்க வேண்டிய ஒரு பொருள் அரிசி. இந்த அரிசியை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது சிந்தாமல், சிதறாமல் பயன்படுத்த வேண்டும்.

சமையலறையில் பயன்படுத்தப்படும் அரிசி கீழே சிந்தினால் நம்முடைய வாழ்க்கையும் சிதறி விடுவதற்கு வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கிறது ஆன்மீகம்! தண்ணீரையும் அதே போல வீணடிக்கக்கூடாது. அரிசியை வெள்ளிக்கிழமையில் புடைக்க கூடாது, வறுக்கவும் கூடாது என்கிற ஒரு பழமொழி உண்டு. அரிசியை சாப்பிட்டால் திருமணத்தில் மழை வரும் என்று கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அரிசியை வெள்ளிக்கிழமையில் சாப்பிடக்கூடாது. மிளகாய் வறுப்பது அல்லது மெஷினில் கொடுத்து மிளகாய் பொடி அரைத்து வருவது போன்ற செயல்களையும் அன்றைய நாளில் செய்யக்கூடாது.

- Advertisement -

நகம் வெட்டுவது, தலை வாருவது, கெட்ட வார்த்தைகளை பிரயோகிப்பது, மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது, சமையலறையில் வெள்ளை நிற பொருட்களை தானம் செய்வது, அழுவது போன்ற விஷயங்களையும் அந்நாளில் செய்யக்கூடாது. அதே போல நெல்லிக்காயையும் வெள்ளிக்கிழமையும் சாப்பிடக் கூடாது. இவை எல்லாம் மகாலட்சுமி அம்சம் என்பதால் மகாலட்சுமிக்கு உரிய இந்நாளில் இதை செய்வதால் நம்மிடம் இருக்கும் மகாலட்சுமி விலகி விடுவாள் என்பதற்காக அவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
பெண்கள் தலையில் இந்த பூவை மட்டும் வைக்கவே கூடாது. குடும்ப கஷ்டத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

வெள்ளிக்கிழமையில் துவரம் பருப்பு போட்டு ஏதாவது ஒரு வகையில் சமையல் செய்ய வேண்டும். இது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று கூறுவார்கள். மேலும் வறுமையை நீக்கக்கூடிய ஒரு எளிய பரிகாரமாகவும் இது இருந்து வருகிறது. அதனால் தான் இன்று பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பார் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் துவரம் பருப்போடு சேர்த்து ஏதாவது ஒரு கீரை வகையையும் சமைக்கலாம். கீரையுடன் ஆரம்பிக்கும் வெள்ளிக்கிழமை சமையல், லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணுமாம்.

- Advertisement -