பெண்கள் தலையில் இந்த பூவை மட்டும் வைக்கவே கூடாது. குடும்ப கஷ்டத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

pengal-flower-lakshmi
- Advertisement -

பொதுவாகவே சாஸ்திரத்தில் பெண்கள் என்றால் அவர்கள் தலையில் பூ சூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படி தலையில் பூ வைக்க கூடிய பெண்கள் அந்த மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியவர்கள். பெண்கள் அன்றாடம் தங்களுடைய தலையில் என்னென்ன பூக்களை வைத்துக் கொள்ள வேண்டும். எந்தெந்த பூக்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றிய சில ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பெண்கள் தலைவிரி கோலத்தோடு தலைக்கு பூ வைக்காமல் இருக்கவே கூடாது. அது குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுக்கும். பெண்கள் என்றால் தலையில் பூ சூடிக்கொள்ள வேண்டும் என்று ஏன் சொன்னார்கள். பெண்களுக்கு கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய உஷ்ணத்தை குறைக்க வாசம் நிறைந்த பூக்கள் உதவி செய்கின்றது. குறிப்பாக தலையை பின்னி பூ வைக்கக்கூடிய அந்த இடத்திற்கும் கர்ப்பப்பைக்கும் சம்பந்தம் இருக்கிறது. வாசனை மிகுந்த பூவை தலையில் சூடிக் கொள்ளும் போது, பெண்களுக்கு இருக்கும் உடல் உஷ்ணம் சீராக்கப்படுகின்றது.

- Advertisement -

பெண்கள் தலையில் வைக்க கூடாத பூக்கள்
குறிப்பாக மல்லிகைப் பூக்களை பெண்கள் வாங்கி சிறிதளவாவது தலையில் சூடிக்கொள்ள வேண்டும். வாசம் இல்லாத பூக்களை பெண்கள் சூடக்கூடாது. வாசம் இல்லாத பூக்களை தலையில் சூடி கொள்வதன் மூலம் எந்த ஒரு நல்லதும் பெண்களுக்கு கிடையாது. வாசம் இல்லாத கனகாம்பரம், டிசம்பர் இப்படிப்பட்ட பூக்களை சூடும்போது இதோடு கொஞ்சம் வாசம் நிறைந்த மல்லி முல்லையையும் சேர்த்து சூடிக் கொள்ளுங்கள்.

இன்று நாகரீக வளர்ச்சியின் உச்சகட்டத்தில் இருக்கின்றோம். திருமணம் வரவேற்பு போன்ற சுப  நிகழ்ச்சியில் தலையில் அலங்காரம் செய்யும் போது பெரும்பாலானோர் வாசம் நிறைந்த பூக்களை வைப்பது இல்லை. கலர் கலராக காகித பூக்களை வைத்து அலங்காரம் செய்கிறார்கள். அது ரொம்ப ரொம்ப தவறு. எத்தனை அழகு நிறைந்த காகித பூக்களையும் அலங்கார பொருட்களையும் தலையில் வைத்தாலும் சரி, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் செய்யும் போது கட்டாயமாக அதில் வாசம் நிறைந்த பூக்கள் இருக்க வேண்டும். அதிலும் மல்லிகை பூ இருப்பது மிக மிக சிறந்தது.

- Advertisement -

பன்னீர் ரோஜா, செண்பகப்பூ, மனோரஞ்சகம், மல்லி, முல்லை வாசம் நிறைந்த ஜாதி மல்லி, என்று இப்படிப்பட்ட பூக்கள் தொடர்ந்து பெண்கள் தங்களுடைய தலையில் சூடிக் கொள்ளும் போது, பெண்களுக்குள் ஒரு நேர்மறை ஆற்றல் அதிகரித்து அவர்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளக் கூடிய வேலையையும் இந்த பூக்கள் செய்கின்றது.

சரி இந்த விஷயத்திற்கு எல்லாம் விதவைப் பெண்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு. பூவும் பொட்டும் கணவனை இழந்த பெண்கள் ஏன் வைக்கக் கூடாது. இந்த கேள்விக்கும் பதிலை இப்போது நாம் தெரிந்து கொள்வோம். பொட்டு என்பது அந்த காலத்தில் தாலியில் கோர்க்கக்கூடிய பொட்டை தான் குறிப்பிட்டு சொன்னார்கள். கணவர் இறந்த பிறகும் அவர் கட்டிய தாலியை கழுத்தோடு போட்டு வைத்திருந்தால், பெண்களுக்கு மீண்டும் மீண்டும் கணவனின் ஞாபகம் வந்து கொண்டே இருக்கும் அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும் அல்லவா. ஆகவே தாலிபொட்டை நீக்க வேண்டும் என்பது அர்த்தம். (பொட்டு என்பது குங்குமத்தை குறிக்கக்கூடிய சொல் அல்ல. விதவைப் பெண்கள் குங்குமம் வைத்துக் கொள்வதிலும் தவறு கிடையாது.)

- Advertisement -

பூவும் பெண் குழந்தைகள் பிறந்ததிலிருந்து அதாவது, ஒரு வயது ஆரம்பத்திலிருந்து அந்த குழந்தைக்கு பூ வைத்து அழகு பார்ப்போம். திருமணமான பின்பு ஒரு குறிப்பிட்ட வயசு வரும்போது பெண்கள் இந்த பூவை தலையில் சூடிக்கொள்ளும் போது, அந்த பூவில் இருக்கும் வாசம், அவர்களுடைய உணர்ச்சியில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். கணவரை இழந்த பெண்ணுக்கு அப்படிப்பட்ட பாதிப்புகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்ற ஒரு காரணத்தால் தான் கணவர் இறந்த பின்பு விதவைப் பெண்கள் பூ சூட வேண்டாம் என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனைக்கு மூன்றே நாளில் தீர்வு கிடைக்க, இந்த 1 எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை சுற்றி போட்டாலே போதும்.

மன உறுதியோடு இருக்கக்கூடிய கணவனை இழந்த பெண்கள் பூ வைத்துக் கொள்ளலாம். ஆனால் கணவனை இழந்த பெண்களுக்கு பூவை பார்க்கும் போது நிச்சயமாக அவர்களுடைய கணவரின் நினைவு வரும். அதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஒரு சாஸ்திரத்தை நாம் கடைபிடித்து வருகின்றோம். தவறு என்று நினைத்தால் எல்லாமே தவறுதான். சரி என்று நினைத்தால் எல்லாமே சரிதான். அது பார்ப்பவர்கள் கண்களில் தான் உள்ளது. அடுத்தவர்களுடைய மனது புண்படாமல் என்றைக்குமே நாம் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப முக்கியம் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -