20 நிமிடத்தில் உங்களுடைய உடல் முழுவதும் கண்ணாடி போல பளபளவென மின்ன ‘ஒயிட்னிங் மேஜிக் பவுடர்’ வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? பிறகு கண்ணாடி போல இருக்கும் உடம்பிலேயே முகம் பார்க்கலாமே.

body-white
- Advertisement -

நிறைய பேருக்கு முகத்தில் இருக்கும் நிறம் கழுத்திலும் கையிலும் இருக்காது. முகம் ஒரு நிறமாக இருக்கும். உடல் ஒரு நிறமாக இருக்கும். இது பார்ப்பதற்கு முழுமையான அழகை கொடுக்காது. நம்முடைய உடலில் இருக்கும் கருமை நிறம் நீங்கி, வெள்ளையாக மாறுவதற்கு வீட்டிலேயே ஒரு பேக் எப்படி தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பொடியை முகத்திற்கு போடலாமா என்று கேட்டால், நிச்சயம் போடலாம். ஆனால் லேசாக பேட்ச் டெஸ்ட் எடுத்து விட்டு அதன் பின்பு முகத்திற்கு அப்ளை செய்து கொள்ளுங்கள்.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு – 1 கப், முல்தானி மெட்டி – 1/2 கப், சிவப்பு சந்தன பொடி – 1/2 கப், இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து விடுங்கள். இந்த பொடி அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்த ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் காய்ந்த ரோஜா இதழ்கள் – 1 கப், கருஞ்சீரகம் – 2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு நைசாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியை ஏற்கனவே டப்பாவில் கலந்து வைத்திருக்கும் பொடியோடு கொட்டி ஒருமுறை கலக்க வேண்டும். அதாவது கடலை மாவு, முல்தானி மெட்டி, சிவப்பு சந்தன பொடி, காய்ந்த ரோஜா இதழ் பொடி, கருஞ்சீரகப்பொடி, எல்லாம் ஒன்றாக கலந்து விட்டால் நமக்கு தேவையான பொடி கிடைத்துவிட்டது.

இந்தப் பொடியை எப்படி பயன்படுத்துவது. தேவையான அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் தயிர் – 2 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு ரோஸ் வாட்டர், ஊற்றி பேஸ்ட் போல கலந்துகொள்ள ‌வேண்டும். இந்த பேஸ்டை கழுத்து கை கால்களில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் விட்டு விட்டு குளிர்ந்த தண்ணீரில் லேசாக ஸ்கரப் செய்து கழுவி விட்டால் போதும். சூப்பரான பளபளக்கும் சருமம் நமக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

வாரத்தில் மூன்று நாள் இந்த பேக்கை பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக கூடிய விரைவில் உங்களுடைய கை கால்களும் வெள்ளையாக பளபளப்பாக மாறும். இந்த பேக்கை முகத்தில் போடலாம். ஆனால் எந்தவித அறிப்பும் உங்களுக்கு இல்லையா என்பதை ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்து விட்டு அதன் பின்பு முகத்தில் போடுங்கள்.

காரணம் கழுத்துப்பகுதி கை கால் பகுதிகளில் தோல் கொஞ்சம் தடிமனாக இருக்கும். முகம் சாப்டான சருமத்தில் இருக்கும். அதனால் தான் இந்த பேக் உங்களுக்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றால் முகத்தில் தாராளமாக அப்ளை செய்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. இதை ஒருமுறை பயன்படுத்தும் போது ரிசல்ட் நன்றாக தெரியும்.

- Advertisement -