Indian air force attack : தயாரிப்பில் இருந்து நிறுத்தப்பட்ட விமானத்தை பயன்படுத்திய இந்தியா. அதிர்ந்து போன பாகிஸ்தான். மிராஜ் 2000 விமானம் சுவாரசிய தகவல்கள்

Miraj-flight
- Advertisement -

புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை சரியாக 3.30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. முசாபராபாத் என்னும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் நடைபெற்றது.

Pulwama

இந்த பதிலடி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உபயோகித்த போர் விமானம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தியா இந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய போர் விமான மிராஜ் 2000 எனும் வகையினை சேர்ந்தது. இந்த போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டில் உள்ள டஸால்ட் எனும் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த தாயாரிப்பு நிறுவனம் கடந்த 2007 ஆம் ஆண்டோடு போர் விமானங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டது. இருப்பினும், அந்த விமானத்தை முறையாக பராமரித்து 12 வருடங்களாக இன்னும் பயன்பாட்டில் வைத்துள்ளது இந்திய ராணுவம். இந்த மிராஜ் 2000 போர் விமானத்தை பயன்படுத்தி 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கை கூட துல்லியமாக தாக்க முடியும். அதனையே இன்று அதிகாலை இந்திய விமானப்படை அதிகாரிகள் நிகழ்த்தி காட்டினர்.

Pakistan

இந்த மிராஜ் 2000 ரக விமானங்களை தற்போது பிரான்ஸ், எகிப்து, யுஎஇ, பெரு, தைவான், கிரீஸ், இந்தியா ஆகியே 7 நாடுகள் மட்டுமே பயன்படுத்தி வருகிறது. பயன்பாட்டில் இல்லாத ஒரு விமானத்தை பயன்படுத்தி இந்திய விமானப்படை இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதால் பாகிஸ்தான் ராணுவம் திகைத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Indian air force attack : சீறிபாய்ந்த இந்திய போர் விமானங்கள். குண்டுகளை அதிபயங்கரமாக வீசும் காட்சிகள் இதோ – வைரல் வீடியோ

- Advertisement -