ரூட்டை ஓரின சேர்க்கையாளர் என்று கூறிய கேபிரியலுக்கு கடுமையான தண்டனை விதித்த ஐ.சி.சி – ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை

Gabriel

இங்கிலாந்து அணி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து முடிந்து உள்ளது. இதில் மேற்கு இந்திய தீவுகள் அணி (2-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேபிரியல் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட்டை ஓரினசேர்கையாளர் என வசை பாடினார். அது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகி விமர்சனத்துக்கு உள்ளானது.

இதனை தொடர்ந்து தற்போது அதற்கு தண்டனை தரும் விதமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது ஐ.சி.சி : இங்கிலாந்து அணியின் கேப்டனை மோசமான முறையில் வசை பாடியதற்காக கேபிரியலுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 75 சதவிகிதம் அபராதமும் மேலும், 4 ஒருநாள் போட்டிகள் அல்லது 4 டி20 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது ஐசி.சி

Joe Root

இதுபோன்ற கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான் இதுபோன்ற வசைப்பாடல் நிகழ்வுகள் நிற்கும். ஆனால், கேபிரியலுக்கு தணடனை அளிப்பது நியாமில்லை விளையாட்டில் இதுபோன்று நடப்பது இயல்பே என்று இதனை சாதாரணமாகவே கையாண்டார் ஜோ ரூட்

இதையும் படிக்கலாமே :

டி20 போட்டியில் ரோஹித்தா ? கோலியா ? ரோஹித் சின்ன இன்னிங்ஸ். கோலி நீண்ட இன்னிங்ஸ். இரட்டை அர்த்தத்தில் பதிலளித்த ரோஹித்தின் முன்னாள் காதலி – ட்ரெண்டிங் பதிவு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்