அவனா நீ. ஏன் குறுகுறுன்னு பாக்குற. நான் ரூட்டை ஓரினசேர்கையாளர் என திட்ட முழுக்காரணம் இதுதான் – கேபிரியல் ஓபன் டாக்

Gabriel

இங்கிலாந்து அணி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து முடிந்து உள்ளது. இதில் மேற்கு இந்திய தீவுகள் அணி (2-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

WestIndies

இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேபிரியல் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட்டை ஓரினசேர்கையாளர் என வசை பாடினார். அது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகி விமர்சனத்துக்கு உள்ளானது.

இதனை தொடர்ந்து கேபிரியல் மீது நடவடிக்கை எடுத்த ஐ.சி.சி அவருக்கு 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடையும், போட்டி ஓய்தியதிலிருந்து 75% அபராதமும் விதித்தது. இப்போது ரூட்டை ஏன் கேபிரியல் திட்டினார் என்று விளக்கம் அளித்துள்ளார். அதில் கேபிரியல் கூறியதாவது : ஜோ ரூட் என்னை தொடர்ந்து நீண்ட நேரம் உற்று பார்த்து கொண்டே இருந்தார். சிறிது நேரம் கழித்து சிரிக்கவும் ஆரம்பித்தார்.

Joe Root

அதனால் எனது பிரஷரை குறைக்கும் விதமாக ஏன் என்னை பார்த்து சிரித்து கொண்டே இருக்கிறீர்கள். ஆண்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இஷ்டமா? என்றேன். இது இவ்வளவு பெரிய விஷயமாக மாறும் என்று நான் நினைக்க வில்லை. மேலும், போட்டி முடிந்து நானும் ரூட்டும் சாதாரணமாக ஹோட்டல் அறையில் பேசிக்கொண்டோம் என்றும், இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

தற்போதைய இந்திய அணியில் மூன்று மேட்ச் வின்னர்கள் உள்ளனர். அதில் இரண்டு பேட்ஸ்மேன் ஒரு பவுலர் – நெஹ்ரா நெகிழ்ச்சி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்