தற்போதைய இந்திய அணியில் மூன்று மேட்ச் வின்னர்கள் உள்ளனர். அதில் இரண்டு பேட்ஸ்மேன் ஒரு பவுலர் – நெஹ்ரா நெகிழ்ச்சி

Nehra

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு அடுத்ததாக வரும் 24 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்க படவுள்ளது.

rohit-koli

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு குறித்தும், இந்திய அணி வீரர்கள் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் இடதுகை முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரத்தயேக பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் நெஹ்ரா கூறியதாவது : இந்திய அணி தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு வலுவாக உள்ளது. மேலும், இந்த ஆஸ்திரேலிய தொடர் மட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரை வெல்லும் அளவிற்க்கு இந்திய அணியின் வீரர்கள் விளையாடி வருவதாக தெரிவித்தார்.

bumrah

மேலும், இந்திய அணியில் தற்போது மூன்று மேட்ச் வின்னர்கள் இருக்கின்றனர். கோலி மற்றும் ரோஹித் பேட்டிங்கிலும், பும்ரா பவுலிங்கிலும் இந்திய அணிக்கு மேட்ச் வின்னர்களாக திகழ்கிறார்கள். இவர்களின் ஆரோக்கியமான பங்களிப்பின் மூலம் இந்திய அணி நிச்சயம் இந்த உலகக்கோப்பை தொடரை வேலும் என்று நெஹ்ரா அந்த பேட்டியில் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

பந்துவீச்சு தான் இவ்வளவு வேகம் என்றால், விக்கெட் வீழ்த்துவதிலும் இவ்வளவு வேகமா ? – சாதனை படைத்த தென்னப்பிரிக்க வீரர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்