வீடு, செல்வம், புகழ், ஆளுமை திறன் பெற வரும் புதன்கிழமை(15/9/2021) அன்று இப்படி கஜலட்சுமி பூஜையை எளிதாக கடைபிடிக்கலாமே!

gaja-lakshm
- Advertisement -

ஒரு மனிதனுடைய முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது செல்வம், புகழ், ஆளுமை திறன் ஆகும். இந்த மூன்றும் ஒருவர் இடத்தில் இருந்து விட்டால் போதும், அவரை ஒருவராலும் அசைத்து விட முடியாது. இந்த மூன்றையும் கொடுப்பவர் தான் கஜலக்ஷ்மி. அஷ்ட லட்சுமிகளில் ஒன்றாக இருக்கும் கஜலட்சுமி, ராஜலட்சுமி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகின்றார். ஆளுமை திறன் மிக்க மன்னர்கள் இடத்தில், தலைவர்கள், முதலாளிகள் போன்றவர்கள் இடத்தில் அதிகமாக வாசம் செய்வார்.

gajalakshmi

இந்த கஜலக்ஷ்மியை ஆவணி மாத வளர்பிறையில் தசமி திதி அன்று விரதம் இருந்து வழிபட்டால் இம்மூன்று செல்வங்களும் நமக்கு கிடைப்பதாக ஐதீகம் உண்டு. நிலம், வீடு, தோட்டம் போன்ற அசையாத சொத்துக்களை கொடுக்கும் கஜ லட்சுமி தாயாரை பெண்கள் இந்த நாளன்று பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் கஜ லக்ஷ்மி பூஜை எப்படி செய்வது? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

கஜலட்சுமி தாயார் அஷ்ட லட்சுமிகளுக்கும் நடு நாயகமாக நின்று காட்சி தருபவளாக இருக்கின்றார். தன்னுடைய நாற்கரங்களில் இரு கைகளில் தாமரை மலர்களையும், மற்ற இரு கரங்களில் அபய, வர முத்திரையையும் காட்டி நமக்கு அருளினை கொடுப்பவராக இருக்கின்றார். கஜலக்ஷ்மி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு எத்தகைய தீய எண்ணங்களும் ஒழிந்து கருணையே வடிவமாகத் திகழும் ஞானம் பிறக்கும். தனக்குத்தான் எல்லாம் என்கிற சுயநல எண்ணத்தை விடுத்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் தானம் என்கிற சிறந்த புண்ணியத்தை பெற்றுக் கொள்ள கஜ லட்சுமி தாயாரை வழிபடுவது சிறப்பு.

ashtalakshmi

தேவலோக யானைகள் அனைத்தும் ஒன்று கூடி இன்னாளில் கஜ லட்சுமி தாயாரை வணங்கி நீராடி பிளிறலை எழுப்பி வழிபட்டதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. கஜலக்ஷ்மி என்கிற இந்த ஆதிலட்சுமி நம் ஒவ்வொருவருடைய வீட்டின் நிலைப்படிக்கு மேல் அமர்ந்து உள்ளதாக ஐதீகம் உண்டு. பத்மாசன நிலையில் அமர்ந்து இருபுறமும் தேவ யானைகள் அபிஷேகம் செய்வது போல இருக்கும் இந்த கஜலட்சுமியை தனலட்சுமி, சாந்தலட்சுமி என்றும் அழைப்பது உண்டு.

- Advertisement -

விரதம் இருக்கும் நாளில் அதிகாலையில் நீராடி, பூஜை அறையில் மரப்பலகை ஒன்றில் சிகப்பு அல்லது மஞ்சள் நிற துணி விரித்து அதில் பச்சரிசி பரப்பி தாமரை கோலம் போட்டு, அதன் மீது அஷ்ட லக்ஷ்மி படம் அல்லது கஜலட்சுமி படத்தை வைத்து அவருக்கு தாமரை மலர் சூட்டி கஜலக்ஷ்மி விளக்கை வைத்து அதில் நெய் தீபமிட்டு தூப, தீப, ஆராதனைகள் காண்பித்து மூல மந்திரங்களை உச்சரித்து முறையாக உங்கள் தேவைகளை வேண்டி வணங்கிக் கேட்டுக் கொண்டால் வீடு, மனை, தோட்டம் போன்ற செல்வங்களையும், செல்வம், புகழ், ஆளுமை திறன் ஆகிய வரங்களையும் வாரி வழங்குவாள்.

kamatchi-vilakku3

காமாட்சி அம்மன் விளக்கு நீங்கள் வாங்கும் பொழுது கவனித்தால் தெரியும் அதில் இருப்பது காமாட்சி அம்மன் அல்ல, இந்த கஜ லட்சுமி தாயார் தான். இருபுறமும் யானைகள் விசிறி விடுவது போல இருக்கும் இந்த கஜலட்சுமி தாயாரை சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து பூஜைகள் அனுஷ்டித்து வந்தால் அன்றைய நாளில் கேட்ட வரமெல்லாம் கிடைக்கும். மகாலட்சுமி அஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீ சூக்தம் ஆகிய ஸ்தோத்திரங்களை பாடுவது சிறப்பு.

mahalakshmi

உங்களுக்கு மந்திரங்கள் தெரியாவிட்டால் அதனை ஒலி வடிவமாக ஒலிக்க விட்டு பின் பூஜைகளை துவங்குங்கள். இவ்வாறு செய்ய உங்களுக்கு மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைத்து செல்வம் பன்மடங்கு உயரும். அழியா புகழ் வந்து சேரும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. தசாவதார வழிபாடு, அஷ்ட லக்ஷ்மி வழிபாடு, விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வது போன்றவற்றை இந்நாளில் செய்வதால் நவகிரக தோஷங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை. இத்தகைய அற்புதம் நிறைந்த கஜலட்சுமி விரத நன்னாளை தவறவிடாமல் பயன்படுத்திப் பலன் பெறலாமே.

- Advertisement -