வாடகை வீட்டில் கணபதி ஹோமம் செய்யலாமா? கணபதி ஹோமம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

home-homam
- Advertisement -

புது வீட்டிற்கு குடியேறுதல், புதுமனை புகுவிழா நடத்துதல் இது போன்ற விசேஷங்களில் மட்டுமே கணபதி ஹோமம் செய்யவேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி ஒன்றும் கிடையாது. வீட்டில் எந்த பூஜை செய்கிறோமோ இல்லையோ வருடத்திற்கு ஒருமுறையாவது இந்த கணபதி ஹோம பூஜையை நிச்சயம் செய்து விட வேண்டும். கணபதி ஹோம பூஜை எதற்காக செய்ய வேண்டும்? அப்படி செய்வதனால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.

homam

நமது வீடுகளில் வாரந்தோறும் பூஜை அறையில் தீப, தூபம் காட்டி பூஜை செய்கின்றோம். வருடத்திற்கு ஒருமுறை வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் தூய்மை செய்து வைக்கின்றோம். வாரம் ஒருமுறை வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுற்றி போடுகின்றோம். இவற்றை நாம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இதனையெல்லாம் நாம் செய்வதற்கு நிச்சயம் உள்ளார்ந்த அர்த்தங்கள் பல இருக்கின்றன. அதேபோல் வீட்டில் உள்ள தெய்வங்களை சாந்தி படுத்தவும், வீட்டில் இருக்கும் தீய சக்திகள் வெளியேறவும் கணபதி ஹோம பூஜை செய்ய வேண்டும் என்கிறது நமது சாஸ்திரங்கள்.

- Advertisement -

எதற்காக கணபதி ஹோம பூஜை?
ஒரு சில வீடுகளில் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுகென்று எப்பொழுதும் மருத்துவ செலவுக்காக பணம் அதிகமாக செலவாகிக் கொண்டேயிருக்கும். வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் மாறி மாறி இது போன்ற உடல்நலப் பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனை வீட்டில் இருந்தால் நிச்சயம் கண் திருஷ்டி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

homam

அதேபோல் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன்கள் கிடைக்கபடாது. அதுமட்டுமல்லாமல் எவ்வளவு வருமானம் வந்தாலும் அதை விட செலவும் அதற்கான பிரச்சனைகளுமே அதிகமாக இருக்கும். அதைப்போல் வியாபாரம் செய்பவர்களுக்கு திடீரென்று எதிலும் லாபம் கிடைக்காமல் எதைத் தொட்டாலும் அதில் நஷ்டம் மட்டுமே வந்து கொண்டிருக்கும்.

- Advertisement -

வீட்டில் எப்பொழுதுமே கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் இருத்து கொண்டே இருக்கும். பெரிய காரணங்கள் ஏதுமில்லை என்றாலும் சிறிய விஷயங்களுக்குக் கூட ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுக் கொள்ளும் சூழ்நிலை உண்டாகும். நன்றாக படிக்கும் குழந்தைகள் கூட படிப்பில் கவனம் இல்லாமல் இருப்பார்கள். நெருக்கமாக பழகிக் கொண்டிருக்கும் உறவினர்களுடனும் கூட பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்.

pasupatha-homam

உங்கள் மீது கண் திருஷ்டி அதிகமாக இருந்தாலும், வீட்டில் தீய சக்திகள் நிலவிக் கொண்டிருந்தாலும் இது போன்ற பிரச்சனைகள் உங்களை சுற்றி தொடர்ந்து நிலவி கொண்டுதான் இருக்கும். கணபதி ஹோமம் செய்வதால் இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். என்று ஆச்சார்ய பெருமக்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

- Advertisement -

Homam

கணபதி ஹோம பலன்கள்:
வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நோய்வாய்ப்பட்டவர்களின் உடல் நலனும் நல்ல முன்னேற்றம் கொள்ளும். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கும் மடமடவென லாபம் உண்டாகும். உறவினர்களிடையே சுமூகமான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர ஒற்றுமை உண்டாகும். மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து தெளிவான மனநிலை உண்டாகும்.

கேது திசை நடப்பவர்களுக்கு அதனால் உண்டாகும் பாதிப்புகள் குறையும். திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற தோஷங்கள் அகன்று மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.

Homam

கணபதி ஹோம பூஜையில் இருந்து வரும் புகை வீட்டில் இருக்கும் தீய சக்திகளை விரட்டியடிக்கும். புத்தியிலும், மனதிலும் புத்துணர்ச்சி உண்டாகும். தனம், தானியம் சேர்க்கை அதிகமாக இருக்கும். உங்களுக்கு பிரச்சினையாக இருக்கும் கடன் தொல்லைகள் விரைவாக அடைந்துவிடும். உங்கள் மீது உள்ள கண் திருஷ்டிகள் விலகி ஓடும்.

ganapathi1

சொந்த வீட்டில் உள்ளவர்கள் மட்டும்தான் கணபதி ஹோமம் செய்ய வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது. குறிப்பாக வாடகை வீட்டில் இருப்பவர்களே அதனை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு கணபதி ஹோமம் பூஜை வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் இருக்கும் வீட்டில் செய்து மனதார கணபதியை வேண்டிக் கொண்டால் விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் உங்களை வந்தடையும்.

- Advertisement -