இன்றைய நாளில் இந்த மந்திரம் 27 முறை கூறினால் போதும் அனைத்து தோஷங்கள், சாபங்கள் நீங்கிவிடும்.

ganapathi-moon-pirai

இன்றைய நாளில் அப்படி என்ன இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? இன்றைய நாள் சதுர்த்தி திதி வந்திருக்கிறது. நான்காம் பிறையை தெரியாமல் கண்டவர்கள் கூட இந்த திதியில் இந்த மந்திரம் உச்சரித்தால் போதும். எல்லா சாபங்களும் நீங்க பெறுவார்கள். அதென்ன நான்காம் பிறையை கண்டால் ஆகாது என்கிறார்கள் என்பவர்களுக்கு இப்பதிவில் விடை கண்டு விடலாம் வாருங்கள். சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை சதுர்த்தி திதியான இன்று இரவு 27 முறை உச்சரித்து பயனடையுங்கள்.

vinayaga

பொதுவாகவே உலகில் நன்மை-தீமை இரண்டும் உண்டு. நேர்-எதிர் என்று எந்த ஒரு விஷயத்திலும் இரண்டு விதமான துருவங்கள் உண்டு. அதைப் போலவே சந்திர பகவனிடமும் இரண்டு பக்கங்கள் உண்டு. சந்திரன் நன்மையும் செய்வார், தீமையும் செய்வார். மற்ற கிரகங்களை விட சந்திரன் அதிக தோஷங்களைப் பெற்றவராக இருக்கிறார். அவர் விநாயகப் பெருமானிடம் சாபம் அடைந்ததும், தட்சனின் சாபத்திற்கு ஆளானதும் புராணங்கள் வாயிலாக நாம் அனைவரும் நன்றாக அறிந்து கொண்டிருக்கிறோம். இது போன்று பல்வேறு சாபத்திற்கு சந்திர பகவான் உட்பட்டிருக்கிறார். அதனால் தான் அமாவாசைக்கு பிறகு வரும் ஒவ்வொரு பிறைக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. மூன்றாம் பிறையை பார்த்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அதைப்போல நான்காம் பிறையை பார்க்க நேர்ந்தால் தீய பலன்கள் கிடைக்கும்.

மூன்றாம் பிறையை பார்த்தால் செல்வ வளம் பெருகும். உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறுவார்கள். அதனால் தான் எம்பெருமான் ஈசனே தன் ஜடாமுடியில் மூன்றாம் பிறையை சூடி இருக்கிறார். நான்காம் பிறையைப் பார்த்தால் அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். நான்காம் பிறையை பார்த்தால் நாய் படாத பாடு பட வேண்டியிருக்கும், என்ற வழக்கு மொழி ஒன்றும் உள்ளது. சதுர்த்தி திதியில் தான் சந்திரன் விநாயகப் பெருமானின் யானை முகத்தை கேலி செய்தான். இதனால் கோபமுற்ற விநாயகப் பெருமான் சாபம் அளித்தார். சதுர்த்தி திதி என்பது வளர்பிறையின் நான்காவது நாளில் வருவது ஆகும். அதனால் தான் நான்காம் பிறையில் சந்திரனை காண்பவர்களுக்கு சாபம் உண்டாகிறது. இந்த சாபத்தை நிவர்த்தி செய்வதற்கு விநாயகரை நினைந்து துதிப்பது ஒன்றே வழியாக இருக்கிறது.

Moondram pirai

சதுர்த்தி திதியில் விநாயகரை நினைத்து வழிபடுவதால் தாயால் ஏற்பட்ட சாபம் கூட நீங்கும் என்பார்கள். சிலருக்கு பெற்ற தாயால் சாபம் இருக்கும். விநயாகரை அவமதித்த காரணத்தினால் சந்திரன் சாபம் பெற்றான். அதேபோல் தாயை அவமதித்த காரணத்தினால் சிலர் சாபம் பெற்று இருப்பார்கள். இப்படிப்பட்ட சாபங்கள் கூட இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நீங்கிவிடும் என்பது ஐதீகம். அந்த அளவிற்கு இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக போற்றப்படுகிறது.

- Advertisement -

கணபதி மந்திரம்:
ஓம் கம் கணபதயே நம!

Kanipakam-Ganapathi

ஒவ்வொரு சதுர்த்தி திதி அன்றும், நான்காம் வளர்பிறையில் இரவு வேளையில் இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து வாருங்கள். இதனால் சந்திர தோஷம், சாபங்கள் போன்றவை முழுமையாக நீங்கும். மூன்றாம் பிறையால் எப்படி சந்திர தரிசனம் என்கிற பெயரில் நல்ல பலன்கள் கிடைக்கின்றனவோ! அதேபோல் நான்காம் பிறையை தரிசனம் செய்பவர்களுக்கு தீய பலன்கள் கிடைக்கும். நம் கர்ம வினைப்படி நம்மை அறியாமலேயே நான்காம் பிறையை காண்பதற்குரிய சூழ்நிலையை இறைவன் உருவாக்கி விடுவார். நன்றாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை கூட நான்காம் பிறையை பார்க்க நேர்ந்தால் பல இன்னல்களுக்கு ஆட்பட வேண்டி இருக்கும். எனவே தோஷ நிவர்த்திக்காக இந்த மந்திரத்தை பத்மாசன நிலையில் அமர்ந்து விநாயகரை நினைந்து 27 முறை உச்சாடனம் செய்து சாப நிவர்த்தியும், தோஷ நிவர்த்தியும் அடைந்து நல்ல பல யோகங்களை அடைந்து மோட்சம் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
சகல சௌபாக்கியமும் பெற, தனலக்ஷ்மி நம் வீட்டிலேயே நிலைத்திருக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ganapathi manthiram in Tamil. Ganapathi manthirangal Tamil. Ganapathi mantra Tamil. Ganapathi mantram Tamil. Ganapathi stuthi Tamil.