எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு, 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு தொடங்கி பாருங்கள்! தடையும் இருக்காது. தோல்வியும் இருக்காது.

navagraham-vinayagar

நம்முடைய வாழ்க்கையில் எதை பிடித்து முன்னேற போகின்றோம், எப்படி முன்னேற போகின்றோம், என்று சிந்தித்தே வாழ்நாளில் பாதி முடிந்திருக்கும். எல்லாவற்றையும் தாண்டி தட்டுத்தடுமாறி ஏதாவது செயலை துணிச்சலோடு செய்வதற்கு இறங்கினால், அதில் ஏகப்பட்ட தடைகள். ஏகப்பட்ட பிரச்சினைகள். முன் வைத்த காலை அப்படியே எடுத்து பின்னாடி வைத்து விடுவோம். வாழ்க்கைக்கான முன்னேற்றப் படிகளில், அடுத்த காலை, மேலே எடுத்து வைத்து முன்னோக்கி செல்லவே முடியாது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஒரு அற்புதமான விநாயகரின் மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Kanipakam-Ganapathi

எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும், முதலில் விநாயகரை வழிபட்டால் அந்த வேலை தடையில்லாமல் நடந்து முடியும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் சில வகையான மந்திரத்திற்கு, சில சக்திகள் அபரிவிதமாக இருக்கிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு மந்திரம் தான் இது.

புரியும்படி சொல்லப்போனால், இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு  எது கிடைக்க வேண்டுமோ அது கட்டாயம் கிடைக்கும். சில விஷயங்களை முயற்சி செய்தும் உங்களுக்கு அது கிடைக்கவில்லை என்றால், அது உங்களுக்கானது இல்லை. உங்களுக்கு அந்த விஷயம் கிடைத்தாலும் அதன் மூலம் வரக்கூடிய நன்மைகளை விட, தீய பலன்களே அதிகமாக இருந்திருக்கும். ஆகவே, அந்தத் தீமைகளை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தியும் இந்த மந்திரத்திற்கு உண்டு.

vinayagar-abishegam

அதாவது, உங்களுக்கு நன்மை தரக்கூடிய ஒரு விஷயத்தை கொண்டு வந்து சேர்ப்பதற்கும், இந்த மந்திரம் உதவியாக இருக்கும். உங்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளை தடுத்து நிறுத்துவதற்கும் இந்த மந்திரம் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பாக ‘விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானே போற்றி’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து விட்டு, பின் வரும்  மந்திரத்தை 27 முறை உச்சரிக்க தொடங்குங்கள்.

- Advertisement -

ஓம் ஆம் ஜெய ஜெய சீக்கிரம் வா வா!
அவ்வும் உவ்வும் வசிய வசிய கணபதி சித்திக்க சுவாகா!

இவ்வளவுதாங்க! இது ஒரு, இரண்டு வரி மந்திரம்தான். உச்சரிப்பதில் எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. பல முறை முயற்சி செய்து தோல்வியடைந்த நீங்கள், இந்த ஒரே ஒரு மந்திரத்தை, ஒரே ஒரு நாள் 27 முறை உச்சரித்து விட்டு அதன் பின்பு நீங்கள் செய்யக்கூடிய காரியத்தைத் தொடங்கி தான் பாருங்களேன். நிச்சயம் வெற்றியைத் தவிர உங்கள் பக்கத்தில் வேறு எதுவும் நெருங்கக்கூட முடியாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உங்களுக்கு இவர்களுடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்று அர்த்தம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.