இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உங்களுக்கு இவர்களுடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்று அர்த்தம் தெரியுமா?

சில விஷயங்கள் நமக்கு நடக்கும் பொழுது சிலருடைய ஆசீர்வாதங்கள் இருப்பதாக நாம் மனரீதியாக உணர்வோம். இதற்கு தக்க உதாரணமாக நாம் இப்பொழுது பூஜை செய்து கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியான பிரார்த்தனையில் திடீரென பூ ஒன்று உங்கள் கைகளில் வந்து விழுந்தால் இறைவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நம்புவீர்கள். இது போல சிறு சிறு விஷயங்களில் கூட தெய்வத்தின் அனுக்கிரஹம் நம்மிடம் இருக்கிறது என்பதை உணர்த்தி விடும். அவ்வகையான அறிகுறிகளும், அதனால் எந்த தெய்வத்திற்கு நம் மேல் கருணை இருக்கிறது? என்பதையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.

praying-god1

ஒரு நல்ல விஷயம் பேசிக் கொண்டிருக்கிறோம். திடீரென கௌலி சத்தம் கேட்கும். அதாவது பல்லி சத்தமிடும். இதை சுப சகுனமாகக் நம்முடைய சாஸ்திரம் கூறி வருகிறது. நல்ல விஷயத்தை பேசிக் கொண்டிருக்கும் பொழுது பல்லி சத்தமிட்டால் கருடாழ்வாரின் அருள் கிடைப்பதாக அர்த்தம் உள்ளது.

அது போல் சிலரது வீடுகளில் சமையலறை ஜன்னல் வழியே அல்லது மொட்டை மாடிகளில் காக்கைக்கு உணவு வைப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள். வழக்கமாக உணவு வைக்கும் வீடுகளில் எல்லாம் தொடர்ந்து காக்கை வருவதில்லை. ஆனால் ஒரு சில வீடுகளில் நீங்கள் சாதம் வைக்கவில்லை என்றாலும் அது சரியான நேரத்திற்கு உங்கள் வீட்டிற்கு ஆஜர் ஆகிவிடும். சமையல் அறை ஜன்னலில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அல்லது மொட்டை மாடியில் உட்கார்ந்து கரைந்து கொண்டே இருக்கும். இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் பித்ருக்களின் ஆசிர்வாதம் இருப்பதாக ஐதீகம் உள்ளது. பித்ரு பூஜைகள் மேற்கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

Crow

அடிக்கடி சிலர் சாதத்தை வீட்டிற்கு வெளியே கொட்டுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இரவில் மீந்து போன சாதங்களை அவ்வாறு செய்வது உண்டு. இதை சாப்பிட வரும் நாய்கள் சாப்பிட்டு விட்டு சென்று விடும். ஆனால் குறிப்பிட்டு ஒரு நாய் மட்டும் உங்கள் வீட்டையே சுற்றிச் சுற்றி வரும். நீங்கள் தினமும் உணவு வைப்பதை அந்த நாய் எதிர்பார்க்கிறது என்று நீங்கள் நினைத்தால் அதில் தவறில்லை. அப்படியானால் எல்லா நாய்களும் தான் வந்து உட்கார வேண்டும். ஆனால் குறிப்பிட்டு ஒரு நாய் மட்டும் உங்கள் வீட்டையே சுற்றி வருகிறது என்றால் உங்களுக்கு பைரவரின் அருள் இருப்பதாக அர்த்தமாகிறது. பைரவரை வணங்கி வாருங்கள் திடீர் அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும்.

- Advertisement -

மீன், பன்றி, சேவல், மயில் என்று விசித்திர ஜந்துக்கள் உங்கள் மேல் அதிக பாசம் வைத்திருந்தால் உங்களுக்கு மகாவிஷ்ணுவின் அருள் இருப்பதாகவே அர்த்தம் படுகிறது. வராஹ ரூபத்தில் இருக்கும் வராகி அம்மன், மச்ச அவதாரம் எடுத்த ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம் என்று பகவானின் அருள் இருந்தால் தான் இது போன்ற வித்தியாசமான ஜந்துக்கள் நம்மிடம் பாசமாக பழகும்.

varaha murthi

எல்லா விலங்குகளும் எல்லோரிடமும் பாசமாக பழகக் கூடியவை தான். நாம் எப்படி அவற்றிடம் பழகுகிறோம் என்பதைப் பொறுத்து தான் அதுவும் நம்மிடம் பழகும். எவரும் நெருங்க முடியாத சிங்கத்திடம் கூட சிலர் கொஞ்சி விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். மனிதர்களைக் கண்டாலே வேட்டையாடும் புலியை கூட வளர்ப்பவர்கள் உண்டு. இவ்வாறான மனிதர்கள் இறையருள் பெற்றதாகவே நம்பப்பட்டு வருகிறது. உங்களிடம் எந்த விலங்கு அல்லது மனிதனை தவிர இருக்கும் மற்ற உயிரினங்கள் பாசமாக இருக்கிறது? என்பதை பாருங்கள். அதற்குரிய கடவுளை நீங்கள் வணங்கி வந்தால் நிச்சயம் உங்களுக்கு ஜாக்பாட் தான்.

இதையும் படிக்கலாமே
அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் இதை மட்டும் செய்தால் வருமானம் பலவழிகளில் வந்து சேரும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.