- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவைகாசி கடைசி நாள் பரிகாரம்

வைகாசி கடைசி நாள் பரிகாரம்

- Advertisement -

இன்று ஜூன் மாதம் 14ஆம் தேதி. வைகாசி மாதம் 31ஆம் தேதி சனிக்கிழமை. தமிழ் மாதம் இன்றோடு நிறைவடைகின்றது. இந்த மாதத்தோடு உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம், ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றால், இன்றைய நாள் இறுதியில் தூங்க செல்வதற்கு முன்பு நாம் செய்ய வேண்டிய எளிமையான ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்றைய பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். என்னதான் தாந்திரீக பரிகாரம் என்றாலும், ஆன்மீக ரீதியாக குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை முதலில் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக இந்த பரிகாரத்தை செய்து, அவர் அவருக்குள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்கி கொள்ளலாம். நாளைய தினம் ஆனி 1ஆம் தேதி, தமிழ் மாதம் பிறக்கும் போது, உங்கள் வாழ்க்கையும் புதுசாக துவங்கும். இதுநாள்வரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் இன்று இரவோடு உங்களை விட்டு விலகி விடும். இதற்கு நிறைய செலவாகுமா. நிறைய பொருட்களை பயன்படுத்தி இந்த பரிகாரத்தை செய்ய வேண்டுமா? எதுவுமே கிடையாது.

- Advertisement -

ஒரு கை பிடி கல்லுப்பு, ஒரு தீப்பெட்டி இருந்தால், இந்த பரிகாரம் உங்களுக்கு நன்மையை செய்து கொடுத்து விடும். இன்று இரவு எல்லா வேலையையும் முடித்துவிட்டு, தூங்குவதற்கு முன்பு இதை செய்யுங்கள். வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு 5 தீக்குச்சிகள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தீக்குச்சியாக எடுத்து பற்றவைத்து “ஓம் ரீங் நசி நசி” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். 5 குச்சிகளை பற்றவைத்து அந்த நெருப்பு எரியும் சமயத்தில், இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். சிறிது நேரம் மட்டுமே அந்த நெருப்பு எரியும் அல்லவா. பிறகு அந்த தீக்குச்சியை அணைத்துவிட்டு, கீழே போட்டு விடுங்கள்.

ஐந்து முறை, ஐந்து குச்சிகள், ஐந்து முறை மந்திரம் சொல்ல வேண்டும். அவ்வளவுதான். ஒவ்வொரு முறை தீக்குச்சியை பற்ற வைக்கும் போது மந்திரத்தை சொல்ல வேண்டும். அந்த நெருப்பு எரியும்போது இந்த மந்திரத்தை சொன்னால், உங்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் அந்த நெருப்போடு நெருப்பாக பொசுங்கிவிடும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

அந்த குச்சிகளை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு கொஞ்சம் கல் உப்பு எடுத்து, உள்ளங்கைகளில் வைத்து, இரண்டு கைகளையும் நன்றாக, முழங்கை வரை அந்த கல்லுப்பை கொண்டு தேய்த்து தண்ணீரில் கழுவி விட வேண்டும். பிறகு உங்களுடைய கால்களையும் கல் உப்பு போட்டு நன்றாக கழுவி விட்டு தூங்க செல்ல வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: தடைகளை நீக்கும் பிள்ளையார் சுழி வழிபாடு

இன்று இரவு தூங்க செல்லும் போது இதை மட்டும் நீங்கள் செய்துவிட்டால் உங்களை பிடித்த தரித்திரம் கஷ்டம் கடன் எல்லாம் உங்களை விட்டு விலகத் துவங்கிவிடும். முடியும் என்றால் கொஞ்சம் தண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு கரைத்து குளித்துவிட்டு தூங்க செல்லுங்கள் இன்னும் நல்லது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் குலதெய்வத்தை வேண்டி இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்