மனிதனின் எலும்புகளை கரைக்கும் சக்தி பெற்ற தெய்வீக நதி பற்றி தெரியுமா ?

Ganga

ஆதிமனிதனாக இருந்த காலத்திலேயே உலகின் பல பகுதிகளிலும் நதிகளின் ஓரத்திலேயே தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான். இன்று உலகின் பல நாடுகளிலிருந்த மிகப் பழமையான நாகரீகங்கள் அனைத்துமே நதிக்கரையோரம் தோன்றியதாகும். அப்படி உலகில் பல நதிகளிருந்தாலும் நமது நாட்டின் வட பகுதியில் ஓடும் “கங்கை நதிக்கு” இருக்கும் ஆன்மிகப் பெருமை போல் உலகின் எந்த ஒரு நதிக்கும் இல்லை. அந்த இறைத்தன்மை கொண்ட கங்கை நதி பற்றிய சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

river ganga

பாரதத்தின் பெரும்பான்மையான மக்கள் வழிபடும் ஒரு புனிதமான தெய்வீகத்தன்மை கொண்ட நதி தான் கங்கை நதி. இந்த நதி இமய மலைத்தொடரில் தொடங்கி பல நூறு கிலோமீட்டர்கள் கடந்து இறுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. இமய மலையில் “கோமுக்” என்ற மலை இந்த கங்கை நதியின் தோற்றுவாய் என்று கூறினாலும், இந்த கங்கை நதியின் உண்மையான தோற்றுவாய் விண்ணில் இருப்பதாக சித்தர்களும், ஞானிகளும் கூறுகின்றனர்.

புராணங்களில் கூட “பாகிரதன்” எனும் அரசன், தனது முன்னோர்கள் நற்கதியடைய சிவபெருமானை குறித்து தவமிருந்து சொர்கத்திலிருந்த இந்த நதியை பூமிக்கு கொண்டுவந்ததாக நாம் அறிகிறோம். அதன் காரணமாகவே இந்த கங்கை நதியின் நீர் நாட்டின் மற்ற நதிகளின் நீரிலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் மற்ற நதிகளின் நீரை ஒரு செம்புக்குடுவையில் அடைத்து வைத்தோமென்றால் சில காலத்திலேயே அந்த நீர் பாசி பிடித்து அசுத்தமாக மாறிவிடும். ஆனால் இந்த கங்கை நதியின் நீரை எத்தனையாண்டுகள் ஒரு செம்பு குடுவையில் அடைத்து வைத்தாலும் அந்த நீர் கெடுவதில்லை.

ganga

மேலும் இந்த கங்கை நதியின் நீருக்கு உயிரினங்களின் எலும்புகளைக் கரைத்து விடக்கூடிய சக்தியிருப்பதாக கூறுகிறார்கள். இதன் காரணமாகவே காசி நகரத்தில் இந்த கங்கை நதிக்கரையோரம் இறந்தவர்களின் ஈமைக்கிரியைகள் செய்யப்பட்டு அந்த எறிந்த உடல்களின் சாம்பல்களும், எலும்புகளும் இந்த நதியில் கரைக்கப்படுகின்றன.

- Advertisement -

ganga

இந்த கங்கை நதி மனிதர்கள் என்றென்றும் போற்றும் சில மகத்தானவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக இருந்திருக்கிறது. மஹாபாரதத்தின் “பீஷ்மர்” இந்த கங்கை நதியின் மைந்தனாக கருதப்படுகிறார். காசியில் இறந்தவர்களின் காதில் “சிவ பெருமான்” மந்திரம் ஓதி, அவர்களை சிவ பெருமான் விண்ணுலகிற்கு அனுப்பும் தெய்வீக காட்சியை இந்த காசி நகர கங்கை நதியோரத்தில் “ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்” கண்டார்.

தனது இளம் வயதில் நாத்திக சிந்தனைகளைக் கொண்டிருந்த “மஹாகவி பாரதி” இந்த கங்கை நதியில் ஒரு முறை குளித்து வெளியே வந்த பிறகு அவர் முற்றிலும் தெய்வீகமான ஒரு மனிதர் ஆவதற்குரிய தொடக்கம் ஏற்பட்டது. இத்தனை மகத்தான இந்த நதி அது பாய்ந்தோடும் சில நகரங்களில் மனிதர்கள் சிலரின் சுயநலத்தால் மாசடைந்திருக்கிறது. அதை அரசும், மக்களும் இணைந்து நீக்கும்பட்சத்தில் அந்த கங்கா தேவியின் அருள் நமக்கு கிட்டும்.

இதையும் படிக்கலாமே:
பழங்கால மனிதனுக்கு கோவில் எதை எல்லாம் தந்தது தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.