பழங்கால மனிதனுக்கு கோவில் எதை எல்லாம் தந்தது தெரியுமா ?

gopuram
- Advertisement -

நம் நாடு உலகளவில் என்றென்றுமே ஆன்மிகத்திற்கு புகழ்பெற்றிருக்கிறது. நம் நாட்டின் கோவில்கள் மற்றும் நம் நாட்டில் இதுவரை தோன்றியுள்ள எண்ணற்ற ஞானிகளையும் பற்றியறிந்து கொள்ள என்றென்றுமே உலகின் மற்ற நாட்டினர் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவில் பிறந்து, எவருமே பேச தயங்கிய விஷயங்களை தைரியமாக முதன் முதலில் பேசிய ஞானியான “ஓஷோ” என்றழைக்கப்பட்ட “பகவான் ரஜ்னீஷ்” இந்திய கோவில்களைப் பற்றி அவர் பேசிய தொகுப்பு இது.

murugan

 

- Advertisement -

“பண்டைய காலத்தில் இந்தியாவில் ரிஷிகள், முனிவர்கள் மக்கள் வழிபட்டு நலம் பெற விஞ்ஞான பூர்வமான முறையில் கோவில்களை அமைத்தனர். இந்துக்களின் வேதங்களின் படி “உயிர்கள் நீரிலிருந்து தோன்றியது” அதன் ஒரு கொள்கையாகும். இதை தற்போதைய அறிவியல் விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்கிறது. அதனால் தான் இன்று இந்தியாவெங்கும் இருக்கும் பிரம்மாண்டமான கோவில்கள் உயிரோட்டமுள்ள நதிகளின் அருகில் கட்டப்பட்டன.

அந்நிய நாடுகளின் படையெடுப்புகளின் முன்பு அவர்களின் கலாச்சாரத் தாக்கம் இந்தியாவில் ஏற்படும் முன்பு வரை இந்தியர்களின் அனைத்தும் கோவிலைச் சார்ந்தே இருந்தன. அப்போதைய மனிதன் தனக்கு உடல் நலம் குறையும் போது கோவிலுக்கு சென்றான். அவனுக்கு மகிழ்ச்சி என்றாலும் கோவிலுக்கு சென்றான். அவனுக்கு துக்கம் என்றாலும் கோவிலுக்கு சென்றான். கோவிலை அவனுடைய அன்றாட வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாததாக இருந்தது.

- Advertisement -

அவன் வாழ்க்கைக்கான சக்தியை அக்கோவிலிலிருந்தே பெற்றான். அதனால் தான் அவன் குடிசை வீட்டிலிருந்தாலும், அவன் வழிபடும் கோவிலை தங்கம் மற்றும் விலை உயர்ந்த ரத்தினங்களை கொண்டு அலங்கரித்தான். தற்காலத்தில் கோவில்களில் புதுப்பித்தல் என்ற பெயரில் பல ஜன்னல்கள், வாயில்கள் ஏற்படுத்தப்படுகின்றன இதனால் அந்த கோவில்களில் இருக்கும் உயிர்ப்புத்தன்மை கொண்ட மின்னோட்டம் தடைபடுகின்றன. மேலும் இப்போது கோவில்களில் இரவுநேரங்களில் வெளிச்சம் தர மின்விளக்குகள் பொருத்தப்படுகின்றன.

swarnagowri

இதுவும் சரியானது அல்ல. அதற்கு பதிலாக எண்ணெய்,நெய் தீபமேற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தும் போது அங்கே ஒரு அற்புதமான சக்தி ஏற்படுவதை நீங்கள் உணர முடியும். ஆகவே இந்திய நாடு மீண்டும் ஆன்மிக சக்திபெற்று எழ வேண்டுமென்றால் அதற்கான முதல் படி அதன் கோவில்களிலிருந்தே தொடங்க வேண்டும். இதைச் செய்யாமல் இந்தியா மீண்டும் ஆன்மிக சூழல் மிக்க ஒரு சமுதாயத்தை உண்டாக்க முடியாது” என்று கோவில்களின் சிறப்பை பற்றி எல்லோரும் அறிந்துகொள்ளும் வகையில் சொற்பொழிவாற்றினார்.

- Advertisement -