ராகுல் மற்றும் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்வினை முடித்து விடாதீர்கள். அவர்களை மன்னிக்கலாமே – முன்னாள் கேப்டன்

rahul-pand

கடந்த சில வாரங்களாக ராகுல் மற்றும் பாண்டியாவின் விவகாரம் பரவலான ஒன்றாக உள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் அந்த நிகழ்ச்சியில் பெண்களை பற்றி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து அனைவரது எதிர்ப்பையும் பெற்றனர்.

KL and HP

மேலும், அவர்களுக்கு எதிரான எதிர்ப்பு வளர இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவர்களை ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கியது. மேலும், முறையான விளக்கம் அளிக்கும் வரையில் அவர்களுக்கு இந்திய அணியில் இணைய தடையும் விதித்தனர்.

இதுகுறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பேசுகையில் அவர் கூறியதாவது : ராகுல் மற்றும் பாண்டியாவினை நாம் மன்னித்து அவர்களை விளையாடவைக்க வேண்டும் ஏனெனில், அவர்கள் இருவரும் இளம் வீரர்கள் மேலும் உலகக்கோப்பை போட்டிகளை அருகில் வைத்து கொண்டு நாம் இப்படி செய்வது அணியின் பலத்தையும் பாதிக்கும்.

ganguly

நாம் அனைவருமே ஏதோஒரு விடயத்தில் தவறினை புரிந்திருப்போம் அதுபோல அவர்களும் ஒரு தவறினை செய்துவிட்டார்கள் என்று எண்ணி அவர்களை மன்னித்து விளையாடவைக்க வேண்டும். அவர்களது கிரிக்கெட் வாழ்வினை முடிவுக்கு கொண்டுவாராதீர்கள் என்றும் கங்குலி அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாட ஆவலாக உள்ளேன் – நட்சத்திர வீரர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்