இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாட ஆவலாக உள்ளேன் – நட்சத்திர வீரர்

kuldeep 1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று (18-01-2019) மெல்போர்ன் நகரில் நடந்துவருகிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 34 ஓவர்கள் முடிவில் 153 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்துள்ளது. இன்று வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

rayudu

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வரும் நட்சத்திர வீரரான புஜாரா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் நான் பங்கேற்று விளையாடி வருகிறேன்.

ஆனால், என்னால் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும். அதிலும் என் திறமையினை நான் நிரூபிப்பேன். எனவே, இந்திய அணியின் அழைப்புக்காக காத்திருக்கிறேன். இதுவரை இந்திய அணிக்காக 5 போட்டிகளில் மட்டுமே நான் ஆடியுள்ளேன். மேலும், போட்டிகளில் பங்கேற்க நான் விரும்புகிறேன் என்று தனது பேட்டியினை அளித்தார்.

pujara

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில் முக்கிய பங்காற்றியவர் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடரின் தொடர்நாயகன் விருதினையும் தட்டி சென்றார்.

இதையும் படிக்கலாமே :

தல தோனியின் பேட்டிங் அனுபவத்தினை விவரித்த – சச்சின் என்ன கூறினார் தெரியுமா?

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்