உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடன் கிரிக்கெட்டா ? வேற எதுவுமே வேணாம். சொன்னா கேளுங்க – கங்குலி காட்டம்

Ganguly
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

pulwama

அதன்காரணமாக இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டிகளில் ஆடக்கூடாது. மேலும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதில் கங்குலி கூறியதாவது : இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டாம். அவர்களுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதை தவிர்த்தாலும் இந்திய அணிக்கு அது பாதகமாகாது. இந்திய அணியின் இப்போது இருக்கும் பலம் பாகிஸ்தான் போட்டியினை விளையாடாமல் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் அளவிற்கு உள்ளது.

Pakistan

எனவே இந்திய அணி கிரிக்கெட் மட்டுமல்ல. பாகிஸ்தான் நாட்டிற்கு சம்பந்தமான அனைத்து விளையாட்டு மற்றும் அரசியல் உறவுகள் என அனைத்தையும் முறித்துக்கொள்ள வேண்டும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, நாட்டு மக்களின் கருத்தும் இதுவே என்று ஆவேசமாக தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

முதல் சதம் அடிக்கும்போதே உங்களுக்கு விராட் கோலி போல துடிப்பா ? வங்கதேச வீரரை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -