முதல் சதம் அடிக்கும்போதே உங்களுக்கு விராட் கோலி போல துடிப்பா ? வங்கதேச வீரரை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – வைரல் வீடியோ

Sabbir

நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது வங்கதேச அணி. ஆனால், அவர்களின் இந்த முடிவு சோதனையில் முடிந்தது.

Nz vs Ban

ஆம் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 330 ரன்களை குவித்தது. இதனால் 331ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கினை நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 242 ரன்கள் மட்டுமே குவித்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் வங்கதேச வீரரான சபீர் ரஹ்மான் 110 பந்துகளில் 102 ரன்கள் அடித்தார். இதுவே அவரது முதல் சதமாகும். இந்த சதத்தை அடித்த பிறகு இந்திய அணியின் விராட் கோலி போன்று அதனை கொண்டாடினார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

இந்த பதிவினை கண்டா இந்திய ரசிகர்கள். இதுதான் உங்களுக்கு முதல் சதம் இதற்கே இந்த அலப்பரையா என்று அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். இருப்பினும் சிறப்பான ஆட்டம் விளையாடியதற்கு வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

360 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்த மே.இ தீவுகள் அணி. எளிதாக சேசிங் செய்து வென்ற இங்கிலாந்து. காரணம் இதுதான் – ஹோல்டர் புலம்பல்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்