இட்லி, தோசைக்கு அட்டகாசமான ‘பூண்டு பொடி’ இப்படி செய்து பாருங்க! இனி சட்னியே தேவையில்லை.

garlic-podi
- Advertisement -

தினமும் இட்லி தோசைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் நீங்கள் அட்டகாசமான பூண்டுப் பொடி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பூண்டு உடலுக்கு ஆரோக்கியமான ஒரு பொருள். பூண்டை வைத்து நாம் நிறைய உணவு வகைகளை சமைத்து இருப்போம். பூண்டு காரக் குழம்பு, புளிக்குழம்பு, பூண்டு சட்னி என்று விதவிதமாக பூண்டை வைத்து சமைத்தாலும் பலருக்கும் பூண்டு சமைத்த உணவு பிடிக்காமல் போகிறது. ஆனால் இந்த பூண்டு பொடியை செய்து கொடுத்து பாருங்கள். பூண்டை விரும்பாதவர்கள் கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு அருமையான சுவையுடன் கூடிய பூண்டு பொடியை எப்படி சமைப்பது என்று இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

garlic-podi1

பூண்டு பொடி செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு – 1/2 கப், உளுத்தம் பருப்பு – 1/4 கப், துருவின தேங்காய் – 1/4 கப், தனியா – ஒரு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 10, சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயப் பொடி – 1/4 டீஸ்பூன்.

- Advertisement -

பூண்டு பொடி செய்வதற்கு முதலில் பூண்டை அரை கப் வருமளவிற்கு நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டை உரித்து நன்றாக இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் குளவியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பூண்டுகளை போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும். இதை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

garlic-podi2

பின்னர் அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை நன்கு சிவக்க பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதேபோல் துருவிய தேங்காயை வறுத்து எடுத்து அதனுடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து எண்ணெய் விட்டு, மல்லி விதையை(தனியா) வறுக்கவும், இதை எடுக்காமல் அப்படியே வர மிளகாய்களை சேர்த்து வதக்கவும். வர மிளகாய் நன்கு வறுபட்டதும், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சீரகம் இரண்டு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடவும். இப்போது கால் ஸ்பூன் அளவிற்கு பெருங்காயப் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை எடுத்து அதே தட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

garlic-podi3

வறுக்க வேண்டியவற்றை வறுத்தபின் ஃபேன் காற்றில் நன்றாக ஆற விடுங்கள். நன்றாக ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு கொர கொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். பூண்டு பொடியை இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு சைட்டிஷ்சாக வைத்து சாப்பிடலாம். சட்னியே உங்களுக்கு தேவைப்படாது. திடீரென்று சமைக்கும் பொழுது என்ன சமைப்பது என்று தெரியவில்லை என்றால் யோசிக்காமல் பூண்டு பொடியை தோசையுடனோ, இட்லியுடனோ வைத்து சாப்பிட்டு விடலாம். இட்லி பொடியை விட பூண்டு பொடி அட்டகாசமாக இருக்கும். ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த பூண்டு பொடி ஒருமுறை செய்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிரிட்ஜில் வைத்து விட்டால் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். சட்னி பத்தாமல் போகிற சமயத்திலும் இது சட்டென கைகொடுத்து மிகவும் உபயோகமாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல ‘பால் பாக்கெட்’ இருந்தா போதும் உடனே இந்த குலோப் ஜாமுன் செஞ்சி அசத்திடலாம்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to make poondu podi in Tamil. Garlic podi recipe in Tamil. Poondu podi recipe in Tamil. Poondu podi seivathu eppadi. Poondu podi seimurai.

- Advertisement -