உங்க வீட்ல ‘பால் பாக்கெட்’ இருந்தா போதும் உடனே இந்த குலோப் ஜாமுன் செஞ்சி அசத்திடலாம்!

‘குலோப் ஜாமுன்’ என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். மென்மையாக, உருண்டையாக, பொன்னிறமாக பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் குலோப் ஜாமூன் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. வாயில் போட்டால் அப்படியே வழுக்கிக்கொண்டு போய்விடும். தின்னத் தின்னத் திகட்டாத ஒரு இனிப்பு வகை என்றே கூறலாம். நாவில் ஜலம் ஊறும் சாதாரண குலோப் ஜாமூன் பாலில் செய்தால் எப்படி இருக்கும்? சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. அவ்வளவு சுவையாக இருக்கும். சாதாரண குலோப் ஜாமூனே அலாதியான சுவை என்றால் வீட்டில் செய்யும் பால் குலோப் ஜாமுன் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். பாலை வைத்து எளிய முறையில் குலோப் ஜாமுன் செய்வது எப்படி? என்பதை இப்பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

milk-gulab-jamun

பால் குலோப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர், சர்க்கரை – 1 கப், தண்ணீர் – 11/2 கப், ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன், மைதா மாவு – 1/4 கப், எண்ணெய் – தேவையான அளவு.

முதலில் அடுப்பை பற்ற வைத்து அடி கனமான பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் பேன் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு லிட்டர் பால் ஊற்றிக் கொள்ளுங்கள். பால் ஒரு கொதி வந்ததும் அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பால் சுண்டி வரும் வரை பாத்திரத்தின் ஓரத்தில் சேர்ந்து வரும் ஏடுகளை உள்ளே எடுத்து எடுத்து போட்டு வாருங்கள். அதற்குள் அடுத்த அடுப்பை பற்ற வைத்து அதில் சர்க்கரைப்பாகு செய்து கொள்ளலாம்.

milk-kova1

சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு டம்ளர் சர்க்கரைக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். சர்க்கரைப்பாகு ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். அதிகம் கொதித்து விட்டால் பாகு ஆறியதும் சர்க்கரை திட்டு திட்டாக இருக்கும். கட்டை விரலையும், ஆள் காட்டி விரலையும் சேர்த்து சர்க்கரைப்பாகை பிடித்து விலக்கிப் பார்த்தால் மெல்லிய கம்பி போல் வரவேண்டும். அதுதான் சரியான பதம் என்று அர்த்தம். சர்க்கரைப்பாகு தயாரானதும் அதில் ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது பால் நன்றாக திரண்டு பால்கோவா போல் ஆகிவிடும். மிகவும் இறுக்கமாக இல்லாமல் சற்று தளர்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஆறவிடுங்கள். கோவா நன்கு ஆறியதும் அதனுடன் கால் கப் அளவிற்கு மைதா மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கால் கப் அளவிற்கு பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்றாக நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஆங்காங்கே திட்டுத்திட்டாக இருக்கக் கூடாது. உங்கள் உள்ளங்கைகளை வைத்து மொத்தமாக நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். உங்கள் கைகளில் நெய் தடவிக் கொள்ளுங்கள் ஒட்டாமல் பிசைய முடியும். பிசைந்து முடித்தபின் மாவின் மேலே லேசாக நெய் தடவி வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் காய்ந்து விடும்.

gulab-jamun-fry

குலோப் ஜாமூன் மாவு ரெடி ஆகிவிட்டது. இதை அப்படியே உருண்டை பிடித்து எண்ணையில் வறுத்து எடுக்கலாம். அல்லது உள்ளே பொடிது பொடிதாக நறுக்கி வைத்த பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகளை ஸ்டஃப் செய்து வைத்து உருண்டை பிடித்து அதன்பின் எண்ணெயில் பொரித்து எடுக்கலாம். உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து செய்யுங்கள். உருண்டைகள் பிடிக்கும் பொழுது மேலே நைசாக வரவேண்டுமென்று போட்டு அழுத்தம் கொடுக்காதீர்கள். நிறைய பேர் செய்யும் தவறு இது தான். அப்படி அழுத்தம் கொடுத்தால் தான் குலோப் ஜாமூன் வெடிப்பு ஏற்படும். நீங்கள் அழுத்தம் கொடுக்காமல் லேசாக நுனி விரல்களால் உள்ளங்கையில் வைத்து உருட்டிக் கொள்ளுங்கள் போதும்.

milk-gulab-jamun2

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்துக் கொண்டு ஒரு ஒரு உருண்டைகளாகப் போட்டு அனைத்தையும் சிவக்க வறுத்து எடுங்கள். எல்லா பக்கமும் ஒரே மாதிரி பொன்னிறமாக சிவந்து வர வேண்டும். எண்ணெய் முழுவதும் வற்றியதும் உருண்டைகளை சக்கரை பாகில் போடவும். உடனே மூடி வைக்கக்கூடாது. காற்று போகுமாறு இடைவெளி விட்டு மூடி வைக்கவும். பாகில் நன்றாக ஜாமுன் ஊறியதும் குலோப் ஜாமுன்களை வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். சுவையான ஹெல்தியான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ‘பால் குலோப் ஜாமுன்’ தயார். நீங்களும் செஞ்சு உங்க வீட்டில் இருக்கும் எல்லாரையும் அசத்துங்க.

இதையும் படிக்கலாமே
இப்படி சப்பாத்திக்கு மாவு பிசைந்து பாருங்க! ஆறினாலும் மிருதுவாகத்தான் இருக்கும். சூப்பர் சப்பாத்தியில் மறைந்திருக்கும் சின்ன ரகசியம்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Gulab jamun recipe with milk in Tamil. Milk gulab jamun recipe. Pal gulab jamun. Gulab jamun recipe with milk. Kova gulab jamun recipe in Tamil.