இவர்களது பந்துவீச்சு எங்கள் அணியை நிச்சயம் அச்சுறுத்தும் – நியூசி பயிற்சியாளர்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது . இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை துவங்குகிறது.

ind vs nz

இதற்காக இரு அணிவீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தொடர்களாக இந்திய அணி எதிர்அணிகளுக்கு கடும் சவாலை அளிக்கும் வகையில் விளையாடி வெற்றியை ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தற்போது மிகுந்த பலத்துடன் திகழ்கிறது. அவர்களை தற்போது வீழ்த்துவது என்பது கடினமான ஒன்றாகவே நினைக்கிறன். இந்திய அணியின் பேட்டிங் வரிசையை விட தற்போது பவ்லிங் யூனிட் மிகுந்த பலத்துடன் திகழ்கிறது.

kuldeep

வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு பக்கம் அசத்தினாலும் மற்றொரு பக்கம் இந்திய அணியின் சுழற்பந்து ஜோடியான குலதீப் மற்றும் சாஹல் ஆகியோர் சிறப்பாக வீசிவருகிறார்கள். வெளிநாட்டு மைதானங்களில் அவர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். எனேவ, நியூசிலாந்து அணிக்கு இந்த தொடரில் இவர்களது பந்துவீச்சு நிச்சயம் ஆபாதகியானதாக இருக்கும் அதனை சமாளிக்கும் வகையில் பேட்ஸ்மேன்கள் தயாராகி வருகிறார்கள் என்று கேரி ஸ்டெட் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக இவரே திகழ்வார் – டேனி மோரிசன்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்