- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்கேஸ் பர்னர் கிளீனிங் டிப்ஸ்

கேஸ் பர்னர் கிளீனிங் டிப்ஸ்

- Advertisement -

கியாஸ் ஸ்டவ் வாங்கிய புதிதில் பர்னர் பார்ப்பதற்கு தங்கம் போல பளபளவென்று ஜொலிக்கும். கொஞ்ச நாள் போனதும் ரொம்பவும் கருப்பாக மாறிவிடும். பொதுவாக கியாஸ் ஸ்டவ் சுத்தம் செய்பவர்கள், பர்னரை சுத்தம் செய்வது கிடையாது. மேற்புற பகுதியில் இருக்கும் ஸ்டவ்வை மட்டும் சுத்தம் செய்து விடுவோம். இதனால் பர்னர் வெப்பத்தால் கருப்பாக மாறிவிடும். கருப்பாக இருக்கும் இந்த கேஸ் பர்னரை தங்கம் போல புதிதாக மின்ன செய்வது எப்படி? என்னும் தகவலை தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ளப் போகிறோம்.

கேஸ் ஸ்டவ் பயன்படுத்துபவர்கள் ஸ்டவ்வை சுத்தம் செய்யும் பொழுது மறவாமல் பர்னரையும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை ஸ்டவ்வை சுத்தம் செய்து வைத்தாலே, பர்னர் இந்த அளவிற்கு கருப்பாக மாறாது. சரி, கருப்பாக இருக்கும் பர்னரை கை வலிக்காமல் எப்படி சுலபமாக சுத்தம் செய்வது, பார்ப்போமா?

- Advertisement -

முதலில் ஸ்டவ்வை சமையலுக்கு பயன்படுத்திய பின்பு நன்கு ஆற விட வேண்டும். வெப்பம் தணிந்த பிறகு ஸ்டவ்வின் ரெகுலேட்டரை கீழ்பகுதியில் ஆப் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு பர்னரை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடுங்கள். ஒரு சிறிய எலுமிச்சை பழத்தை இரண்டாக பிளந்து பர்னரின் மீது பிழிந்து விடுங்கள். உடனே அதன் மீது ஈனோ பாக்கெட் ஒன்றை ஓப்பன் செய்து கொட்டுங்கள்.

ஈனோ சேர்த்ததும் நுரைக்க ஆரம்பிக்கும். அந்த நுரைய அடங்குவதற்கு முன்பே, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவையும் போடுங்கள், மீண்டும் நுரைக்க ஆரம்பிக்கும். பிறகு கொஞ்சம் தூள் உப்பு போட்டு, டொமேட்டோ கெட்சப் இருந்தால் அதையும் அதன் மீது அப்படியே ஊற்றுங்கள். கடைசியாக கொஞ்சம் விம் லிக்விட் அல்லது சோப் தூள் சேர்த்து கொள்ளுங்கள். பர்னரின் மீது கையை வைக்கக் கூடாது. அசையாமல் அப்படியே ஒவ்வொன்றாக பர்னரின் மீது முழுவதுமாக படரும்படி சேர்க்க வேண்டும். 2 மணி நேரம் அப்படியே ஊற விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு கொதிக்கும் தண்ணீரை அதன் தலையில் கொண்டு போய் மூழ்கும் வரை கொட்டுங்கள். இந்த விஷயத்தை நீங்கள் சாயங்கால நேரத்தில் செய்ய வேண்டும். இரவு முழுவதும் அப்படியே ஊற விட்டு விடுங்கள். காலையில் எழுந்ததும் கருப்பாக இருந்த அந்த பர்னரை எடுத்துப் பார்த்தால், புதிதாக இருப்பது போல காணப்படும். பிறகு சபீனா அல்லது லிக்விட் பயன்படுத்தி ஸ்கிரப்பர் அல்லது இரும்பு நார் கொண்டு லேசாக தேய்த்து கொடுங்கள். சுத்தமாக கழுவி பாருங்கள், ரொம்பவே பளிச்சுன்னு வாங்கிய புதிதில் எப்படி இருந்ததோ, அந்த அளவிற்கு சூப்பராக மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே:
29-01-2025 அபிஜித் நட்சத்திர பரிகாரம்

ஒரு முறை சுத்தம் செய்து வைத்த பின்பு இனி கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் தவறாமல் சற்று சிரமம் பார்க்காமல் பர்னரை தனியாக எடுத்து கழுவி விட வேண்டும். ஸ்டீல் ஸ்டவ் பயன்படுத்துபவர்கள் விம் லிக்விட் உடன் கொஞ்சம் புளித்த தயிர், கடலை மாவு சேர்த்து பர்னரை சுத்தம் செய்து பாருங்கள், ரொம்பவும் எளிதான முறையில் ஸ்டவ் மற்றும் பர்னர் சுத்தம் செய்து விடலாம். கிளாஸ் டாப் ஸ்டவ் பயன்படுத்துபவர்கள் விம் லிக்விட், எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்கிரப்பர் வைத்து தேய்த்தாலே ஸ்டவ் புதிது போல மின்னும்.

சற்று முன்