உங்க வீட்டு ஸ்டவ்வை சுத்தம் செய்ய இனி தண்ணீர்கூட தேவையில்லை! பிசுபிசுப்பான அடுப்பை சுத்தம் செய்ய இந்த 2 பொருள் மட்டுமே போதும். தண்ணீர் இல்லாமல் ஸ்டவ்வை எப்படிங்க சுத்தம் செய்வது?

gas
- Advertisement -

நம்முடைய சமையலறையில் சுத்தமாக இருக்க வேண்டிய பொருட்களில் நாம் சமைக்கும் கேஸ் ஸ்டவும் ஒன்று. இந்த கேஸ் ஸ்டவ் எப்போதுமே எண்ணெய் படிந்து பிசுபிசுப்பாகத் தான் இருக்கும். குறிப்பாக, ரீஃபைண்ட் ஆயில் பயன்படுத்துபவர்களது வீட்டில் எண்ணெய் பிசுபிசுப்புக்கு குறைவிருக்காது. எங்கு தொட்டாலும் பிசுபிசுப்பு, அடுப்பிலும் பிசுபிசுப்பு. குறிப்பாக அடுப்பின் ஓரங்களில் வெள்ளை நிறத்தில் எண்ணெய் படிந்து இறுக்கமாக இருக்கும். தினம்தோறும் துடைத்தாலும் அடுப்பு நிச்சயம் சுத்தமாக இருக்காது.

lemon

ஆனால், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் பயன்படுத்துபவர்கள் வீட்டில் பிசுபிசுப்பு குறைவாகத்தான் இருக்கும். சரிங்க, எண்ணெயை பயன்படுத்துவது அவரவரது இஷ்டம். ஆரோக்கியத்திற்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெயும் நல்லது என்ற நல்ல கருத்தோடு இந்த பதிவினை தொடரலாம்.

- Advertisement -

முதலில் உங்களது அடுப்பை சுத்தம் செய்ய தேவைப்படும் அந்த இரண்டு பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். முதல் பொருள், பாதி எலுமிச்சை பழம், 1 ஸ்பூன் அளவு பல் தேய்க்கும் பேஸ்ட். ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, பாதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் கொஞ்சம் பல் தேய்க்கும் பேஸ்டையும் தடவிக் கொள்ளுங்கள்.

gas

இப்போது பேஸ்ட்‌ தடவிய எலுமிச்சம் பழத்தை உங்களது ஸ்டவ்வின் மேல் பிழிந்து, அந்த எலுமிச்சம் பழத் தோலிலேயே, நன்றாக அடுப்பு முழுவதும் தேய்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களும் சேர்ந்து, லேசாக நுரை வர ஆரம்பிக்கும். அப்போது நன்றாக தேய்த்தால் ஸ்டவில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு முழுமையாக நீங்கிவிடும்.

- Advertisement -

தினம்தோறும் அடுப்பை சுத்தமாக வைத்துக் கொள்பவர்களுக்கு ஸ்கிரப்பர் தேவைப்படாது. எண்ணெய் பிசுபிசுப்பு சுலபமாக நீங்கிவிடும். ஒருவேளை உங்கள் அடுப்பை நீங்கள் நீண்ட நாட்களுக்கு துடைக்காமலேயே விட்டுவிட்டால், அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுப்பு படிந்திருந்தால், இறுதியாக ஸ்டீல் நாரை கொண்டு தேய்த்துக் கொடுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். வெறும் ஐந்தே நிமிடத்தில் உங்களது அடுப்பு சுத்தமாகி இருக்கும். இறுதியாக ஒரு காய்ந்த காட்டன் துண்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

gas1

முதலில், அந்த துண்டை வைத்து ஸ்டவ்வின் மேலே இருக்கும் அந்த நுரையை அப்படியே துடைத்து எடுத்து விடலாம். இரண்டாவதாக, உங்கள் கையில் இருக்கும் துண்டை தண்ணீரில் நன்றாக அலசி, பிழிந்து மீண்டும் உங்களது ஸ்டவை துடைத்து எடுத்து விடுங்கள். அவ்வளவுதான். ஸ்டவ் பளபளப்பாக மாறிவிடும். உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ஃபாலோ பண்ணிக்கோங்க.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு பிரஷர் குக்கர், விசில் வரும்போது கூட, இனி பொங்கி வழியவே வழியாது. இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்களேன்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -