கேஸ் ஸ்டவ் மேல் படிந்திருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு கறைகளை எளிதாக அகற்ற இந்த 2 பொருள் போதுமே!

gas-stove-baking-soda
- Advertisement -

கேஸ் ஸ்டவ் பொறுத்தவரை தினமும் சுத்தம் செய்து விடுவது தான் நமக்கு மிகவும் நல்லது. அதில் அழுக்கு சேர விட்டு விட்டால் ஒரு நாள் மொத்தமாக நமக்கு பெரும் வேலையாக அமைந்து விடும். ஒவ்வொரு வேளையும் சமைத்து முடித்த பின் ஈரத்துணியால் துடைத்து எடுத்து விட்டு கீழே சிலிண்டரையும் ஆஃப் செய்து விட வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து செய்தாலே அது பழக்கமாக மாறி விடும். இதனால் உங்களுக்கு கூடுதல் நாட்கள் கேஸ் கிடைக்கும்.

gas-stove

கேஸ் ஸ்டவ் மற்றும் அந்த பகுதி டைல்ஸ் முதல் தரை வரை இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்க சுலபமான வழிமுறை உள்ளது. இதற்கு இந்த இரண்டு பொருட்களை சேர்த்தாலே போதுமானது. அந்த இரண்டு பொருட்கள் என்ன? அதை வைத்து எப்படி கேஸ் ஸ்டவ்வை சுலபமாக கிளீன் செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

கேஸ் ஸ்டவ் ஸ்டீல் ஸ்டவ் ஆக இருந்தால் அடிக்கடி எண்ணெய் பிசுக்கு சேர்ந்து விடும். எனவே ஒரு முறை சுத்தம் செய்து வைத்து விட்டால் அதிலிருந்து தினமும் மறக்காமல் துடைத்து வைத்து விடுங்கள். கஷ்டப்பட்டு ஸ்டீல் நார், ஸ்கிரப்பர் எல்லாம் பயன்படுத்தி தேய்க்க வேண்டிய அவசியமில்லை.

stove

ஒரு சிறிய பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா போட்டுக் கொள்ளவும். மறுபுறம் ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். ஸ்டவ்வின் கறைபடிந்த பகுதியில் பேக்கிங் சோடாவை தூவி கொள்ளுங்கள். பேக்கிங் சோடாவின் மேல் எலுமிச்சை சாறு விட்டால் நுரை பொங்கி வரும். அந்த நுரையிலேயே எண்ணெய் பிசுக்குகள் முழுவதுமாக நீங்கிவிடும்.

- Advertisement -

கேஸ் ஸ்டவ்வின் நட்டு போடப்பட்டிருக்கும் பகுதியில் கருப்பாக எண்ணெய் பிசுக்கு படிந்து இருக்கும். அந்த பகுதியில் மீண்டும் ஒரு முறை பேக்கிங் பவுடர் போட்டு எலுமிச்சைச் சாறு விட்டு 5 நிமிடம் ஊறவிட்டு பின்னர் தேய்த்தால் சுலபமாக கறை நீங்கிவிடும். அடுப்பின் அடியில் எவர் சில்வர் பிளேட்டுகள் வைத்து விட்டால் பால் அல்லது சாப்பாடு பொங்கி வழிந்தாலும் தரை வீணாகாமல் இருக்கும்.

baking-soda

தினமும் பாத்திரம் கழுவும் பொழுது அப்படியே கிச்சன் மேடையையும் ஒரு முறை தண்ணீர் விட்டு கழுவி தள்ளி விட்டாலே போதும். எப்போதும் உங்களுடைய சமையலறை பளபளப்புடன் காணப்படும். கேஸ் ஸ்டவ் மட்டுமல்ல அதன் பின்னால் இருக்கும் டைல்ஸ்களிலும் சிறிதளவு பேக்கிங் சோடா தூவி, எலுமிச்சை மூடியை வைத்து தேய்த்து விட்டாலே போதும். அதில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு நீங்கி சுத்தமாகிவிடும்.

- Advertisement -

salt-and-lemon

சமையல் சோடா எனப்படும் பேக்கிங் சோடா சமையலில் மட்டுமல்ல சமையலறை சுத்தத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. துர்நாற்றத்துடன் இருக்கும் சமையலறை சிங்கிள் சிறிதளவு பேக்கிங் சோடாவை தூவி பின்னர் டிஷ் வாஷ் லிக்விட் பயன்படுத்தி தேய்த்து விட்டால் போதும் கெட்ட வாடை அடிக்காது.

gas-stove1

இவ்வாறு ஸ்டவ்வை சுத்தம் செய்து முடித்த பின் எப்போதும் ஈரமாக அப்படியே விட்டுவிடக் கூடாது. ஒரு சுத்தமான உலர்ந்த துணியைக் கொண்டு துடைத்து உலர எடுத்து விட வேண்டும். எப்போதும் பாலை சிம்மில் வைத்து விட்டு வேலை பார்ப்பது கேஸ் ஸ்டவ்வின் சுத்தத்திற்கு கியாரண்டி தரலாம். நாம் பார்க்கும் வரை பொங்காத பால் லேசாக திரும்பினால் சட்டென பொங்கிவிடும் இதனாலேயே பல நேரங்களில் ஸ்டவ்வை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் பார்த்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
நித்திய மல்லி, மல்லி, முல்லை, ரோஜா போன்ற பூச்செடிகள் அதிக பூக்கள் தருவதற்கு இந்த 2 பொருட்களை பயன்படுத்தினால் போதுமே!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -