கவுதம் கம்பீர் : 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அணிந்திருந்த ஜெர்ஸியை பாதுகாத்து வரும் கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்திய அணி கேப்டன் தோனியின் தலைமையில் 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 1983 ஆம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து இந்தியா இந்த தொடரை வென்றது. மும்பையில் வான்கடே மைதானத்தில் நடந்த அந்த இறுதி போட்டியில் இந்திய அணியில் 3ஆம் வீரராக களமிறங்கி அணியின் வெற்றிக்கு தூணாய் நின்று வெற்றிக்கு வழிவகுத்தவர் இந்திய அணி வீரரான கம்பீர் ஆவார்.

Worldcup

இறுதி போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 274 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 275 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துவக்கத்தில் சச்சின், சேவாக் என அடுத்தது வெளியேற அணிய தாங்கி 122 பந்தில் 97 ரன்கள் குவித்தார் கம்பீர். பிறகு தோனியின் 91 ரன்கள் மூலம் இந்திய வெற்றி பெற்றது. இந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்க கூடாது என்று முடிவெடுத்த கம்பீர் என்ன செய்து இருக்கிறார் என்று தெரியுமா ?

- Advertisement -

அன்றைய போட்டியில் தனது முழு பங்களிப்பையும் கொடுத்த கம்பீர் அந்த மண் கரையோடு இருக்கும் அந்த ஜெர்ஸியை துவைக்காமல் இன்றுவரை அதனை பிரேம் செய்து தனது வீட்டின் அறையில் மாட்டி வைத்துள்ளார் என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அவருடைய வாழ்நாளில் அந்த நாளை மறக்க கூடாது என்பதற்காக இறுதி போட்டியில் விளையாடிய ஜெர்சியை இவ்வாறு பாதுகாத்து வருகிறாராம் கம்பீர்.

gambhir 1

இதேபோன்று தோனி இறுதி போட்டியில் சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற பிறகு மைதானத்தில் இருந்து ஒரு ஸ்டம்பை பிடுங்கியதை நாம் பார்த்திருப்போம். அதனை தோனி தன் வீட்டில் இன்றுவரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாராம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

B.C.C.I : அபிநந்தனுக்கு பி.சி.சி.ஐ அளிக்க உள்ள கவுரவம். அபிநந்தனுக்கு இந்திய அணியின் சீருடையை அளிக்க உள்ள பி.சி.சி.ஐ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Gautham gambhir saved his worldcup final jersy

- Advertisement -