B.C.C.I : அபிநந்தனுக்கு பி.சி.சி.ஐ அளிக்க உள்ள கவுரவம். அபிநந்தனுக்கு இந்திய அணியின் சீருடையை அளிக்க உள்ள பி.சி.சி.ஐ

Abhinandan
- Advertisement -

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் புல்வாமா மாவட்டத்தில் ஏற்படுத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 44 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். அதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை பால்கோட் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாமை முழுமையாக அழித்தது.

Pulwama

இதனை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே பதட்டமான போர் சூழல் ஏற்பட்டது. பிறகு பாகிஸ்தான் நாட்டு விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவியதால் அதனை தடுக்க தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் போர் விமானத்தில் விரட்டி சென்று பிறகு, பாகிஸ்தான் நாடு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். பிறகு நேற்று இரவு அவர் சமாதான உடன்படிக்கையில் பாகிஸ்தான் வசமிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

- Advertisement -

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமையான பி.சி.சி.ஐ அபிநந்தனை கவுரவிக்கும் விதமாக அவருக்கு இந்திய அணியின் சீருடையை வழங்க உள்ளது. இதோ அந்த புகைப்படம் :

- Advertisement -

இந்த டிவீட்டினை பி.சி.சி.ஐ தனது அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நேற்று இரவு இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி அனைத்து பிரபலங்கள் மட்டும் மக்கள் என அனைவரும் தங்களது மகிழ்ச்சியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படிக்கலாமே :

- Advertisement -

Virat Kohli : கோலி செய்த ட்வீட். நேற்று பாகிஸ்தான் வசம் இருந்து நாடு திரும்பிய அபிநந்தனுக்காக மனமுறுகிய கோலி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Abhinandan gets honoured by B.C.C.I

- Advertisement -