முட்டாள் தனமான முடிவை நாமே தேடி கொள்ள வேண்டாம். உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா இதற்காக மோதியே தீர வேண்டும் – சுனில் கவாஸ்கர் விருப்பம்

கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

pulwama

அதன்காரணமாக இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டிகளில் ஆடக்கூடாது. மேலும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில் கவாஸ்கர் கூறியதாவது : இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்காவிட்டால் அது நமது அணிக்கு தான் புள்ளிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். பாகிஸ்தான் அணிக்கு ஒரு இழப்பும் இல்லை மேலும், ணமற்ற நாடுகள் இந்திய அணியின் இந்த நிலையினை புரிந்து கொள்ளாது. எனவே, நாம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க வேண்டும்.

worldcup

பங்கேற்று அவர்களை பழிவாங்கும் விதமாக போட்டியை மிக பிரமாண்டமான வெற்றி பெற்று அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் என்னுடைய இந்த கருத்து நியாயம் என்றே நான் நினைக்கிறன் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

கேள்வியா கேட்டுக்கொண்டே இருக்காதீங்க கொஞ்சம் பயிற்சி எடுக்கவும் விடுங்க. நான் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நிச்சயம் ஆடுவேன் – இந்திய இளம் வீரர் நம்பிக்கை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்