கேள்வியா கேட்டுக்கொண்டே இருக்காதீங்க கொஞ்சம் பயிற்சி எடுக்கவும் விடுங்க. நான் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நிச்சயம் ஆடுவேன் – இந்திய இளம் வீரர் நம்பிக்கை

Team

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக வரும் 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dhoni

இந்த ஆஸ்திரேலிய தொடருக்கான டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பிங் வீரரான ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். இவரின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக சீனியர் வீரரான தினேஷ் கார்த்திகை ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்தில் இவருக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இதனால் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பண்ட் தன்னை இந்த தொடரில் நிரூபிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பண்ட் ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். அதில், பண்ட் கூறியதாவது : இந்திய அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப என்னால் விளையாட முடியும். இப்போது எனக்கு முறையான பயிற்சி அவசியம்.

Pant

நான் பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிற்கும் சரியான நேரத்தை கொடுத்து பயிற்சி செய்து என்னை நிரூபிப்பேன். அதற்கு எனக்கு நேரத்தை கொடுங்கள் கேள்விகளை முன்வைத்துக்கொண்டே இருக்காதீர்கள். நான் நிச்சயம் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றி தேடிதருவேன் என்று ரிஷப் பண்ட் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

ஹார்டிக் பாண்டியாவை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முழுத்தொடரிலும் இருந்தும் வெளியேற்றிய பி.சி.சி.ஐ – காரணம் இதுதான் அதிகாரபூர்வ அறிவிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்