இந்த 1 மந்திரத்தை இப்படி உச்சரித்தால் ஏழேலு ஜென்மத்தில் செய்த பாவங்கள் எல்லாம் நொடியில் தீருமாம் தெரியுமா? உங்கள் வாழ்விலும் அதிசயங்கள் நடக்க இந்த மந்திரத்தை தினமும் சொல்லுங்கள்.

gayathri-om

மந்திரங்களை உச்சரிப்பது என்பது நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்தவும், உண்மையான தியான நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவும், இறைவனின் பக்கம் நம் மனம் திசை திருப்பவும் உச்சரிக்கப்படுகிறது. உண்மையில் மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. மந்திரங்கள் இல்லாமல் கடவுள்களும் இல்லை. எல்லா கோவில்களிலும் மந்திரங்கள் உச்சரிக்கபடுவதால் தான் அங்கு எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவாமல் தடுக்கப்படுகின்றன. கோவில்களில் முழுக்க முழுக்க நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும் என்பதால் நாம் அங்கிருக்கும் பொழுது நம்முடைய மனம் ஒருநிலை படுகிறது. வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இறை சிந்தனையில் நாம் மூழ்கி போகின்றோம். மனம் அமைதியான தியான நிலையை அடைவதை நம்மால் உணர முடிகிறது.

mantra-signature

அத்தகைய மந்திரங்களை நமது வீடுகளிலும் உச்சரித்தால் வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்கும். நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து விட்டால் நம்முடைய எண்ணங்களும், சிந்தனைகளும் நல்ல விஷயங்களை நோக்கி பயணிக்கும். அப்போது நமக்கு தோல்விகள் என்பது வரவே வராது. ஒவ்வொரு பூஜையின் பொழுதும் கட்டாயம் வாயை திறந்து மந்திரத்தை சத்தமாக அல்லது மனதிற்குள் சொல்லும் மந்திரங்களை மனதிற்குள்ளும் தாராளமாக கூச்சப்படாமல் உச்சரியுங்கள்.

நிறைய பேர் இதை செய்வதில்லை. ஒரு சில பெண்கள் சுற்றி இருப்பவர்களை பற்றி கவலைப்படாமல் மந்திரங்களை தைரியமாக உச்சரிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்கள் இதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மந்திரத்தை உச்சரிப்பதற்கு எதற்கு தயக்கம்? நீங்கள் உச்சரிக்கப் போகும் 1 மந்திரம் உங்கள் வாழ்க்கையையே மாற்றும் என்றால் உங்கள் தயக்கத்தை தகர்த்து எறியுங்கள். மற்ற பெண்களைப் போல் நீங்களும் மந்திரத்தை உச்சரிக்க பழகிக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக தீர்வதை நீங்களே உணர்வீர்கள்.

praying-god

இப்படி இருக்கும் பொழுது மந்திரங்களின் தாயாக இருக்கும் காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்தால் எவ்வளவு பலன் கிடைக்கும் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். காயத்ரி மந்திரத்தை அனைத்து மந்திரங்களுக்கும் தலைவியாக பார்க்கப்படுகிறது. காயத்ரி தேவியை அன்னபூரணியாகவும் பார்க்கப்படுவதால் காயத்ரி மந்திரம் உச்சரித்தவர்களுக்கு வறுமை என்பதே வராதாம். சாப்பாட்டிற்கு எந்த கஷ்டமும் வராமல் உங்களுடைய சந்ததியினரும் சிறப்பாக வாழ தினந்தோறும் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

திருமணம் நடைபெறுவதில் தோஷங்கள் இருந்தால் கட்டாயம் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். திருமண தோஷங்கள் முற்றிலும் நீங்கி விரைவில் திருமணம் யோகம் கைகூடி வரும். அதுபோல் தீராத நோய்கள் இருந்தால் தினந்தோறும் காயத்ரி மந்திரம் உச்சரித்து வந்தால் போதும் எந்த நோயாக இருந்தாலும் விரைவாக காணாமல் போய்விடும். காயத்ரி மந்திரத்தை ‘சர்வ ரோக நிவாரணி’, ‘சர்வ துக்க பரிவாரணி’ என்றும் கூறப்படுகிறது. நோய்களையும், துக்கங்களையும் போக்க மூன்று வேளை காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் போதும்.

gopuram-2

ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்கிற நான்கு வேதங்களும் படித்த பலன்கள் இந்த ஒரு மந்திரத்தை உச்சரித்து வருவதால் உங்களுக்கு கிடைக்கும். தினமும் உச்சரிப்பவர்களுக்கு வாழ்வில் நிறைய அதிசயங்கள் நடக்கும். நல்லது செய்யக்கூடிய அனைத்து தேவதைகளும் காயத்ரி மந்திரத்தில் இருப்பதாக ஐதீகம் உள்ளது. இதனை எப்படி உச்சரிக்க வேண்டும் தெரியுமா? அதில் தான் சூட்சமம் உள்ளது.

gayathri-devi

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி பார்வையை இரு புருவ மத்தியில் நிறுத்தி உச்சரிக்க வேண்டும். மூன்று வேளையும் ஒருமுறை உச்சரித்தாலே போதும். பூஜை அறையில் தியான நிலையில் நிலையில் அமர்ந்து உச்சரிக்க வேண்டும். அந்த நேரத்தில் வேறு ஏதாவது வேலையில் இருந்தாலும் அதிலிருந்து சற்று தள்ளி வந்து ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து உச்சரித்து விட்டு மீண்டும் வேலையை தொடங்கலாம்.

yoga

நீங்கள் புருவ மத்தியில் கவனத்தை செலுத்தும் பொழுது உங்களுக்கு தலை வலிக்க கூடாது. அந்த அளவிற்கு கவனம் முழுவதும் அந்த மந்திரத்தின் மீது இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் சிறந்த பலன்களை அளிக்கும். சூரியன் உதயமான பின்னிலிருந்து அஸ்த்தமானம் ஆவதற்குள் காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளில் உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது அமைதியாக அமர்ந்து உச்சரித்து விட்டு உங்கள் வேலைகளைப் பாருங்கள் உங்கள் வாழ்விலும் நிச்சயம் அதிசயம் நிகழும்.

இதையும் படிக்கலாமே
கையில் காசு இல்லையா? அப்படின்னா இந்த அஷ்டகத்தை 18 முறை வாசியுங்கள் தன மழை பொழியும்!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.