கெயில் – மனசாட்சி இல்லாமல் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய கெயில்

Gayle

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5 ஆவது மற்றும் போட்டி நேற்று லூசியா நகரில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 28.1 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

Gayle

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தாமஸ் சிறப்பாக பிசந்துவீசி 5.1 ஓவர்களில் 21 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்கள் என்ற இலக்கினை அனாயசமாக 12.1 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெயில் 27 பந்துகளில் 77 ரன்கள் அடித்து நொறுக்கினார்.

கெயில் 19 பந்துகளில் 50 ரன்களை அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக வேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 27 பந்துகளில் 77 ரன்கள் அடித்த கெயில் அதில் 5 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடித்தார். அவரின் அதிரடி ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரி அடித்து பிரமாதப்படுத்தினார்.

Gayle

இதன்மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் (2-2) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ். மேலும், உலகக்கோப்பை தொடரில் தங்களது ஆட்டம் இப்படித்தான் இருக்கப்போகிறது என்றும் காண்பித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே :

விராட் கோலி அடித்த பிலிக் ஷாட்டை பார்த்த சுனில் கவாஸ்கர் என்ன பேசினார் தெரியுமா ? – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்