விராட் கோலி அடித்த பிலிக் ஷாட்டை பார்த்த சுனில் கவாஸ்கர் என்ன பேசினார் தெரியுமா ? – வீடியோ

sunil

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 236 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை எதிர்த்து இந்திய அணி ஆடியது.

Toss

இந்திய வீரர்கள் ரோஹித், தவான், கோலி மற்றும் ராயுடு ஆகியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தடுமாறிய இந்திய அணியை தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி சிறப்பாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் சேர்த்து போட்டியினை வெற்றிகரமாக முடித்து கொடுத்தனர். 87 பந்துகளில் 81 ரன்கள் குவித்த ஜாதவ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். தோனி சிறப்பாக ஆடி 59 ரன்களை குவித்தார்.

இந்த போட்டியில் சிறப்பாக துவங்கிய கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். சத்தம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 45 பந்துஹகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். மேலும், அவர் அடித்த ஒரு பிலிக் ஷாட்டை பார்த்த வர்ணனையாளர் சுனில் கவாஸ்கர் பாராட்டி தள்ளினார். இதோ அந்த வீடியோ :

இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரில் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

எம்.எஸ். தோனி : தனது அதிரடி பாணியில் ஆட்டத்தை முடித்து வைத்த தல தோனி – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்