அடித்தது மொத்தம் 12 சிக்ஸர் அதில் இத்தன பாலா காணாமல் போகும். கிறிஸ் கெயிலை கடிந்த மைதான நிர்வாகம் – ராட்சஸ சிக்ஸர்கள் வீடியோ

Gayle

இங்கிலாந்து அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (20-02-19) பார்படாஸில் நடைபெற்றது.

Chris 1

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான கெயில் ஒரு ஆண்டுக்கு பிறகு நேற்றைய போட்டியில் அணிய இணைந்து விளையாடினார்.

அவரின் ஆட்டம் நேற்று தொடக்கத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் பிறகு தனது அதிரடி பாணிக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார். நாலாபுறமும் பந்தை சிதறடித்து இவர் ஒருநாள் போட்டிகளில் தனது 24ஆவது சதத்தினை பதிவுசெய்தார். இந்த போட்டியில் 12 சிக்ஸர்களை அடித்த கெயில் அதில் 6 பந்துகளை மைதானத்திற்கு வெளியில் அடித்து தொலைத்தார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

இந்த போட்டியில் இவரது சிக்ஸர்கள் ஒவ்வொன்றும் வானை நோக்கி பறந்தது. மொத்தமாக 6 பந்துகளை மைதானத்தை விட்டு வெளியே அடித்து தொலைத்தார். இதனால் அம்பயர்கள் அடிக்கடி பந்தினை மாற்றி கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை இந்தியா பாகிஸ்தான் மேட்ச். மொத்த பார்வையாளர் இருக்கை 25,000. ஆனால் ஐசி.சி -க்கு வந்திருக்கும் வேண்டுகோள் விண்ணப்பம் எத்தனை லட்சம் தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்