நோன்பின் போது சொல்ல வேண்டிய கௌரி காயத்ரி மந்திரம்

gowri-manthram
- Advertisement -

நாளைய தினம் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதோடு சேர்த்து நாளை கேதார கௌரி விரதமும் கடைபிடிக்கப்படும். தீபாவளியுடன் வரும் அமாவாசை திதியில், கௌரி தேவையை வழிபாடு செய்தால் நம் குடும்பத்திற்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. சில பேருக்கு இந்த நோன்பு எடுக்கும் வழக்கம் இருக்கும்.

சில பேருக்கு நோன்பு எடுக்கும் வழக்கம் இருக்காது. உங்களுடைய வீட்டில் நோன்பு எடுக்கும் வழக்கம் இருந்தால் வழிபாடு செய்யும் போது இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்க வேண்டும். உங்களுக்கு நோன்பு எடுக்கும் வழிபாடு இல்லை என்றாலும் பரவாயில்லை.

- Advertisement -

வெள்ளிக்கிழமை போல வீட்டில் பூஜை செய்து மகாலட்சுமி தாயை வழிபாடு செய்யும்போது கௌரி தேவியை மனதில் நினைத்துக் கொண்டு வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால், நோன்பு எடுத்தால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் நிச்சயம் கிடைக்கும். உங்களுடைய குடும்பத்திற்கும் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். கௌரி விரதத்தின் போது உச்சரிக்க வேண்டிய கௌரி காயத்ரி மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

கௌரி காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் முறை

பொதுவாகவே இந்த கேதார கௌரி விரதம் என்றால் பெண்கள் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்பதுதான் தாத்பரியம். அந்த காலத்தில் எல்லாம் 21 நாட்கள் இந்த நோன்பை கடைபிடித்து வந்தார்கள். அது சில நாட்களில் 11 நாட்களாக குறைந்து. சில நாட்களில் 3 நாட்களாக குறைந்து. இன்று வெறும் ஒரு நாள் தான் நோன்பு இருக்க கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது. காலத்திற்கு ஏற்ப இதுவும் மாறிவிட்டது. அதை குறை சொல்ல முடியாது.

- Advertisement -

அதாவது நாளைய தினம் 12.11.2023 ஆம் தேதி மதியம் 3.00 மணி அளவில் அமாவாசை திதி பிறப்பதால், நாளைக்கு தான் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. உங்களுடைய வீட்டில் நோன்பு தட்டு வைக்கும் பழக்கமே இல்லை என்றாலும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம் தவறு கிடையாது. நாளை மாலை நோன்பு இருப்பவர்கள் உங்களுடைய வழக்கத்திற்கு ஏற்ப வழிபாட்டு முறைகளை முடித்துக் கொள்ளுங்கள். இறுதியாக பூஜை அறையில் அமர்ந்து குடும்ப நலனை வேண்டி இந்த மந்திரத்தை உச்சரிக்கவும்.

நோன்பு இல்லாதவர்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி உங்களால் முடிந்த நெய்வேத்தியத்தை சக்தி தேவிக்கு வைத்து மனம் உருகி குடும்ப நலனுக்காக வேண்டுதல் வைத்து, பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை உச்சரிக்கவும்.

- Advertisement -

காயத்ரி கௌரி மந்திரம்:

ஓம் ஞானாம்பிகாய வித்மஹே
மகாதபாய தீமஹி
தந்நோ கௌரி ப்ரசோதயாத்.

ஓம் சௌபாக்யை வித்மஹே
காமமாலாய தீமஹி
தந்நோ கௌரி ப்ரசோதயாத்.

ஓம் ஸோஹம்ச வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி தந்நோ
கௌரி ப்ரசோதயாத்.

ஓம் பகவத்யை வித்மஹே
மஹேஸ்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்.

ஓம் மகாதேவ்யை வித்மஹே
ருத்ர பத்னியை தீமஹி
தந்நோ கௌரி ப்ரசோதயாத்

ஓம் நாராண்யை வித்மஹே
துர்காயை தீமஹி
தந்நோ கிணி ப்ரசோதயாத்.

ஓம் காத்யனாய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கை ப்ரசோதயாத்.

ஓம் ஜ்வாலமாலினி வித்மஹே
மகா சூலினி தீமஹி
தந்நோ துர்க்க ப்ரசோதயாத்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பு அதிகரிக்க மகாலட்சுமி தாயாரை வணங்கும் முறை

இந்த மந்திரத்தை நேரம் இருப்பவர்கள் 108 முறை சொல்லலாம். 27 முறை சொன்னாலும் தவறு கிடையாது. ஒருமுறைதான் படிக்க முடியும் என்றாலும் தவறு கிடையாது. மனம் உருகி நாளை சக்தி தேவியை நினைத்து பிரார்த்தனை செய்தால் கௌரி தேவியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -