செல்வ செழிப்பு அதிகரிக்க மகாலட்சுமி தாயாரை வணங்கும் முறை

deepavali dheepam
- Advertisement -

தீபாவளி பண்டிகையை பொறுத்த வரையில் ஒவ்வொரு மாநிலத்தவரும் ஒவ்வொரு வகையில் கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தீபாவளி அன்று காலையில் கங்கா ஸ்தானம் செய்து புத்தாடை அணிந்து இறைவழிபாட்டை முடித்து பிறகு இனிப்புடன் பட்டாசு வெடித்து துவங்குவது வழக்கம். அன்றைய நாளில் அசைவ சாப்பாடு சமைப்பது நம்முடைய வழக்கமாக உள்ளது.

ஆனால் வட மாநிலத்தில் மார்வாடிகள் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமே வெகு சிறப்பாக இருக்கும். அவர்கள் இந்த தீபாவளி திருநாளை ஐந்து நாட்கள் வரை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். இன்றளவும் அவர்களுடைய பாரம்பரிய முறைகளை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாமல் மகாலட்சுமி தாயாரை வரவேற்கும் ஒரு பொன்னாகவே இந்த நாளை கொண்டாடுகிறார்கள்

- Advertisement -

தீபாவளி திருநாளில் மகாலட்சுமி தாயாரை வரவேற்கும் முறை

இந்த தீபத் திருநாளில் அவர்கள் வீடுகளில் காலையிலே பண்டிகை களை கட்டியிருக்கும். வீடு முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து வாசலில் வண்ண வண்ண நிறங்களில் பெரிய ரங்கோலி கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி வீட்டையே ஜெகத்ஜோதியாக மாற்றி இருப்பார்கள்.

அவர்கள் தீபாவளி அன்று தான் புதிய தொழில் கணக்குகளை துவங்குகிறார்கள். அன்றைய தினத்தில் ஆரம்பிக்கும் எதுவும் நிலைத்து இருக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. ஆகையால் அந்த நாளில் புதிய கணக்குகள், புதிய தொழில்களை துவங்கி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்கிறார்கள். அதுமட்டுமின்றி பங்கு சந்தைகளில் முதலீட்டிற்கென ஒரு நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் முதலீடு செய்வார்கள்.

- Advertisement -

இன்றைய நாளில் அவர்கள் மகாலட்சுமி தாயாருக்கு வீட்டில் லட்சுமி பூஜை செய்வார்கள். இந்த பூஜையை செய்வது மகாலட்சுமி தாயார் தங்களுடைய இல்லம் தேடி வரும் நாளாக அவர்கள் கருதுகிறார்கள். இந்த பூஜையானது அவர்கள் நள்ளிரவு வரை செய்கிறார்கள். ஆகையால் அன்றைய தினத்தில் அவர்களின் வீட்டு கதவுகளை அடைக்காமல் தாயாரின் வருகைக்காக இரவு முழுவதும் திறந்து வைத்து காத்திருப்பார்கள்.

இந்த மகாலட்சுமி பூஜையும் அவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வைத்திருக்கும் வெள்ளி இல்லாத மகாலட்சுமி விக்ரகத்தை வைத்து தான் வழிபடுவார்கள். இது வம்சா வழி யாக வழிபடும் முறையாக அவர்கள் இன்றளவும் பின்பற்றி வருகிறார்கள். இன்றைய நாளில் அவர்கள் வீட்டில் செய்யப்படும் இனிப்பு பலகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அதிலும் தாயார் மகிழ்ந்து இருப்பதாக நம்புகிறார்கள். பெரும்பாலும் அந்த இனிப்புகள் மஞ்சள் நிறத்தால் ஆனவையாகவே இருக்கும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி தீபாவளி திருநாளில் பார்வதி தேவியார் சிவபெருமானுடன் தய கட்டம் ஆடிய நாள் என்றும் சொல்லப்படுகிறது. ஆகையால் வடநாடுகளில் தீபாவளி அன்று இரவு முழுவதும் கண்விழித்து தாயகட்டை, சீட்டு கட்டு போன்றவற்றை பணம் வைத்து விளையாடுகிறார்கள். இது சரி தவறு என்பதை காட்டிலும் அன்றைய நாளில் தங்களுக்கு பண வரவை தரக்கூடிய விளையாட்டாகவே இதை கருதுகிறார்கள்.

அதுமட்டுமின்றி அன்றைய தினத்தில் வீட்டில் உள்ள பெரியவர்கள் இடத்தில் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு புதிய ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாக வாங்கி பத்திரப்படுத்திக் கொள்வார்கள். அன்றைய நாளில் வீட்டில் தங்களுடைய தலைக்கு தலைப்பாகை மற்றும் புதிய மெத்தை போன்றவற்றை மாற்றக் கூடிய நாளாகவும் இந்த நாளை வைத்திருக்கிறார்கள்.

ஐந்து நாள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் மூன்றாவது நாளில் பசுக்களுக்கான நாளாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாளில் பசுஞ்சாணத்தில் விளக்கு செய்து எறிய விட்டு அதை பசுக்களின் காலால் மிதிக்க செய்வதன் மூலம் தங்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்கும் என்ற கருத்து அவர்களிடம் நிலவுகிறது.

இதையும் படிக்கலாமே: புதன் பகவானால் ஏற்படும் உடல் உபாதைகள்.

வடமாநிலங்களில் இந்த தீபாவளி திருநாளையே அவர்கள் செல்வ செழிப்பிற்கான ஒரு நாளாக கருதி அன்றைய நாள் முழுவதுமே மகாலட்சுமி தாயாரை மகிழ்விக்கும் விதமாக அனைத்தையும் செய்து பலன்கள் பெறுகிறார்கள். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் உள்ள தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென்று நாங்கள் நம்புகிறோம்.

- Advertisement -