திருமணத்தடை நீங்கவும், கணவன் மனைவியின் பேச்சை தட்டாமல் கேட்கவும், 2 ஏலக்காய் போதும்.

thirumanam

முந்தைய காலங்களில் எல்லாம் திருமண வயதை எட்டாதவர்களுக்கு கூட, விரைவாக திருமணத்தை நடத்தி முடித்து வைத்துவிடுவார்கள். அது ஆண்களாக இருந்தாலும் சரி. பெண்களாக இருந்தாலும் சரி. நம்முடைய தாத்தா பாட்டிகள் எல்லாம் சிறுவயதிலேயே திருமணம் செய்துகொண்டதாக நம்மிடம் கூறுவார்கள். நம்முடைய முன்னோர்களின் காலகட்டமானது இப்படி இருந்தது, நவநாகரிகமாகி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், திருமணம் நடப்பது என்பது சற்று கடினமாகத்தான் உள்ளது. திருமணம் தள்ளிப் போவதற்கு பலவகைப்பட்ட காரணங்கள் இருந்துதான் வருகிறது. ஜாதக கட்டத்தில் பிரச்சனை, தோஷங்களில் பிரச்சனை, திருமணம் நடத்துவதற்கு பண கஷ்டம், சிலருக்கு குருபலன் இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் தள்ளிக்கொண்டே போகும். இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kalappu thirumanam

நீங்கள் எந்த ஜாதகக்காரர்களாக இருந்தாலும், எந்த நட்சத்திரமாக இருந்தாலும், எந்த தோஷம் உள்ளவர்களாக இருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், அந்த தோஷத்தின் வீரியமானது நிச்சயமாக குறையும். திருமணமாகாத பெண்களாக இருந்தால், வளர்பிறையில் வரும் முதல் வியாழக்கிழமை அன்று, மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள், ஒரு தாம்பூலத் தட்டில், மண் அகல்விளக்கு நெய்தீபம், 2 விரலி மஞ்சள், 3 வகையான இனிப்பு, இரண்டு ஏலக்காய், ஒரு டம்ளர் தண்ணீர் இவைகளை வைத்து யாருக்காவது தானமாக அளிக்க வேண்டும்.

திருமணமாகாத ஆண்களாக இருந்தால், விரலி மஞ்சளை மட்டும் எடுத்துவிட்டு மேலே கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வைத்து தானமாகக் கொடுக்கலாம். ஆனால் ஆண்கள் வளர்பிறையில் வரும் முதல் வெள்ளிக்கிழமையில் இந்த தானத்தை செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வர, நிச்சயம் திருமணத்தில் இருக்கும் தடை நீங்கும்.

Turmeric

இந்த பரிகாரத்தோடு சேர்த்து வெள்ளிக்கிழமை அன்று, திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பான ஒன்று. உங்களால் முடிந்தால் தொடர்ந்து 5 வார வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் சுற்றி வாருங்கள். 40 வயதைக் கடந்தவர்களுக்கு கூட நல்ல வரனை காட்டக்கூடிய சக்தி திருவண்ணாமலை ஈசனுக்கு உண்டு என்று கூறுகிறது சாஸ்திரம்.

- Advertisement -

திருமணம் ஆகவில்லையே என்று கஷ்டத்தோடு ஒருசிலர் இருக்க, பலபேர் திருமணத்திற்குப் பிறகு ஒற்றுமை இல்லாமல் தவித்து வருகிறார்கள். கணவரின் அன்பினால் மனைவியை கட்டுப்படுத்தவும், மனைவியின் அன்பினால் கணவரை கட்டுப்படுத்தவும், வாரத்தில் ஏதாவது ஒரு நாளை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அன்றைய தினம் காலை 6 மணி அளவில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர்ந்து கொண்டு, இரண்டு ஏலக்காய்களை எடுத்து உள்ளங்கையில் மூடியவாறு வைத்துக் கொண்டு, இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஓம் ஹரீம் நமோ பகவதி சர்வஜன மனோகரி
ஸ்திரி புருஷ வசிகரி கிலீம் கிலீம் மமவசம்
குருகுரு சுவாகா

இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு உங்கள் கைகளில் இருக்கும் ஏலக்காயை நன்றாக பொடி செய்து பாலிலோ அல்லது தேனீரிலோ கலந்து, நீங்கள் கணவராக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவருக்கும் கொடுத்துவிடலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயம் ஒருவருடைய அன்புக்கு மற்றவர் அடிமையாகி தான் வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 வாரம் செய்து வாருங்கள். பலனை உங்களால் கண்கூடாக காண முடியும்.

இதையும் படிக்கலாமே
அதிர்ஷ்ட தேவதைகளை வசியம் செய்து உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? ரகசிய வழி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Elakkai nanmaigal Tamil. Thirumana thadai neenga Tamil. Thirumana thadai neenga valipadu Tamil. Kanavan manaivi valipadu Tamil. Kanavan manaivi otrumai pariharam Tamil.