மகாலட்சுமியிடம் வேண்டிய வரத்தை பெற வெள்ளிக்கிழமை கட்டாயம் பூஜை அறையில் இதை வைக்க வேண்டும்.

poojaroom-lakshmi

மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய லட்சுமி தேவிக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று பார்த்து பார்த்து பூஜை புனஸ்காரங்களை நம் வீட்டில் செய்து வருகின்றோம். பெரிய பெரிய தாந்திரீக மாந்திரீக மந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை என்றாலும் சின்னச்சின்ன வழிபாடுகளை செய்வதன் மூலம் மகாலட்சுமி நிரந்தரமாக நம் வீட்டில் குடியிருப்பாள் என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை. எப்பவும் போல் உங்களது வீட்டை வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்துவிட்டு வெள்ளிக்கிழமை பூஜைக்கு தயார் செய்து கொள்ளலாம். அந்த வெள்ளிக்கிழமை பூஜையோடு சேர்த்தார், இந்த சிறிய பரிகாரத்தை செய்வதன் மூலம் மகாலட்சுமி நிச்சயம் உங்களது வீட்டில் நிறைந்து இருப்பாள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த எளிய பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

mahalakshmi

உங்களது பூஜை அறை தரையாக இருந்தாலும் சரி. அலமாரியாக இருந்தாலும் சரி. அந்த இடத்தை ஈரத்துணியால் முதலில் தொலைத்துவிட்டு, அரிசி மாவில் சிறியதாக ஒரு கோலம் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்மேல் பித்தளை தாம்பூலத் தட்டு சிறிதளவு ஒன்றை வைத்துக் கொள்ளலாம். தட்டு இல்லாதவர்கள் சில்வர் தட்டை பயன்படுத்த வேண்டாம். வாழை இலையையோ அல்லது வெற்றிலையையோ வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக கட்டாயம் செம்பினால் ஆன சொம்பு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சொம்பின் மேல் பகுதி முழுவதும் மஞ்சள் பூசப்பட்டு மூன்று அல்லது ஐந்து என்ற என் கணக்கில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளலாம். அலங்கரிக்கப்பட்ட சொம்பில் முழுமையான அளவு தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை குங்குமம், இரண்டு ஒரு ரூபாய் நாணயம், சிறிதளவு பச்சை கற்பூரம், ஏலக்காய்-2 இவைகளை அந்தத் தண்ணீரில் போட்டுவிடவேண்டும். தண்ணீரின் மேல் வாசனை நிறைந்த பூக்கள் இரண்டை வைத்து விடவும்.

அவ்வளவுதான். ஆனால் நீங்கள் இந்த பரிகாரத்தை மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக செய்வது இன்னும் சிறப்பானது. இவ்வாறாக அலங்கரிக்கப்பட்ட சொம்பினை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்த மறு நிமிடமே அந்த இடத்திற்கு ஒரு தனி பொலிவு கிடைப்பதை உங்களால் உணர முடியும். இதோடு சேர்த்து மகாலட்சுமிக்கு உலர் திராட்சைப் பழங்கள் ஐந்தை நைவேத்தியமாகப் படைத்து தீப தூப ஆராதனை காட்டி வழிபட்டாலே போதும்.

lakshmi

இந்த பூஜையை தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வரும் போது உங்கள் மனதில் இனம் புரியாத நிம்மதி ஏற்படும். அதை உணர்ந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். மகாலட்சுமியின் ஆசியைப் பெற இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பார்த்தால் பலன் நிச்சயம் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் லக்ஷ்மி தேவி சன்னதி இருக்கும் கோவில்களுக்கு சென்று மல்லிகைப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால் லக்ஷ்மியின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற முடியும்.

Varalakshmi

வரலட்சுமி நோன்பு அன்று விரதமிருந்து பூஜை செய்பவர்களுக்கும் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வரலட்சுமி நோன்பு அன்று விரதம் இருக்க முடியாதவர்கள் சாதாரண வெள்ளிக்கிழமைகளில் கூட மகாலட்சுமியை நினைத்து விரதமிருந்து சுமங்கலிப் பெண்களுக்கும் தாம்பூலம் கொடுத்து தங்களது விரதத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்தப் பொருளில் ஏதாவது ஒன்று உங்கள் வீட்டில் இருந்தால் கூட நிச்சயம் அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mahalakshmi arul pera. Mahalakshmi pariharam. Mahalakshmi kadatcham Tamil. Mahalakshmi valipadu in tamil.