இந்தப் பொருளில் ஏதாவது ஒன்று உங்கள் வீட்டில் இருந்தால் கூட நிச்சயம் அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்டும்.

எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும், வெற்றி அடைந்தால் அவர்கள் நிச்சயமாக அதிர்ஷ்டசாலிகள் தான். அப்படி வெற்றிவாகை சூடி கொண்டே இருக்க வேண்டும் என்றால் அதற்கான முதல் மந்திரம் ‘விடாமுயற்சி’ மட்டும்தான். எவரொருவரிடத்தில் விடாமுயற்சி இருக்கின்றதோ, அவர்களிடம் வெற்றியும், அதிர்ஷ்டமும் தானாக தேடி வந்து கொண்டேதான் இருக்கும். ஒருவருக்குத் தோல்வி வந்துவிட்டது என்பதற்காக துவண்டு போய் அமர்ந்து விடாமல், அடுத்தடுத்த முயற்சியில் எவரொருவர் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றாரோ அவரது வாசலை நிச்சயமாக அதிர்ஷ்ட தேவியான மகாலட்சுமி தட்டத்தான் செய்வாள். இப்படி ஒரு பக்கம் இருக்க, சில பேருக்கு எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் அதிர்ஷ்ட காத்து அவர் பக்கம் வீசவே வீசாது. இப்படிப்பட்டவர்கள் அதிர்ஷ்டத் தோடு சேர்த்து, அந்த மகாலட்சுமியை தங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள சில வழிமுறைகளை கடைப்பிடித்து தான் ஆக வேண்டும்.

mahalakshmi

மகாலட்சுமியின் அம்சம் ஒருவரது வீட்டில் நிலைத்திருக்க சில பொருட்களை அவர்களது வீட்டில் நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம். அந்த பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலாவதாக விநாயகரின் அம்சங்களில் ஒன்றான நாட்டிய கணபதி சிலை ஒன்றை வாங்கி உங்கள் வீட்டு வாசலுக்கு நேராக, வீட்டின் உள்ளே வைத்துவிடுங்கள். நாட்டிய கணபதியின் சிலையாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, நாட்டிய கணபதியானவர் நம் வீட்டிற்கு பணம் கஷ்டத்தை தராமல் பார்த்துக்கொள்வார்.

dancing-ganapathy

அடுத்ததாக புல்லாங்குழல். புல்லாங்குழலை நாம் பார்க்கும் போதே நம் காதுகளில் மெல்லிய இசை கேட்கத் தொடங்கிவிடும். அதை வாசித்தால் தான் ஓசை வரும் என்று அர்த்தம் இல்லை. அதை பார்த்தாலே அந்த இசையானது நமக்கும் கேட்பது போல ஒரு எண்ணம் தோன்றி, ஒரு விதமான மன அமைதி உண்டாகிவிடும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் எதுவாக இருந்தாலும் அது நம்மை பாதிக்காமல், இந்தப் புல்லாங்குழல் பார்த்துக்கொள்ளும் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அழகான இசை, அழகான பொருள் இப்படி அமைதியாக, அழகாக இருக்கும் எந்த ஒரு பொருளிலும் மகா லட்சுமி குடியிருப்பாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகத்தானே பெண்களை மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுகிறார்கள்.

- Advertisement -

கையில் சங்கு வைத்திருப்பது போல லட்சுமிதேவி இருக்கும் படத்தை நம் வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது.

otrai kan thengai

பொதுவாக தேங்காய்க்கு மூன்று கண்கள் இருக்கும். அதில் ஒற்றை கண் உடைய தேங்காய் கிடைப்பது மிகவும் கஷ்டம். அப்படி கிடைத்தால் அந்த ஒற்றைக் கண் தேங்காயை வாங்கி மஞ்சள் துணியில் கட்டி நம் வாசற்படியில் கட்டி வைத்தால் அதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வரும். ஆனால் இப்படி தேங்காயை உங்கள் வீட்டு வாசல் படியில் கட்டி வைத்திருந்தால் தினம்தோறும் அதற்கு ஊதுவத்தி தீபம் காட்டி வழிபடுவது சிறப்பான ஒன்று.

வீட்டில் குதிரைகள் ஓடுவது போன்று படங்களை மாட்டி வைத்திருந்தால், அதிலும் ஏழு குதிரைகள் ஓடுவதுபோல படம் இருந்தால், வீட்டில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

money plant

வீட்டில் மணிபிளான்ட் கொடி வளர்ப்பது நல்லது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அந்தச் செடியை வடக்கு திசையிலும், கிழக்குத் திசையிலும் வைப்பது மிகவும் நல்லது.

வீட்டில் மீன் தொட்டியில் வண்ண மீன்கள் வளர்ப்பது மனதிற்கு அமைதியை தரும். அதிலும் தங்க வண்ண மீன்களை வளர்த்தால் வீட்டிற்கு அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது.

moongil-maram

சமீபகாலமாக பல பணக்காரர்கள் வீட்டில் குட்டை மூங்கில் மரம் வளர்க்கப்படுகிறது. காரணம் இல்லாமல் எதற்காக இதை வளர்க்க போகிறார்கள்? நிச்சயம் இதை வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதால் தானே.

முடிந்த வரை உங்களது வீட்டில் இருக்கும் கடிகாரத்தை கதவிற்கு மேல் பகுதியில் மாற்ற வேண்டாம்.

இதையும் படிக்கலாமே
திருஞானசம்பந்தர் பாடிய திருமுறையில் ஒரு பாடல் போதும். இறைவனிடமிருந்து என்ன வரத்தை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Athirstam peruga Tamil. Athirstam peruga vastu Tamil. How to get luck in life in Tamil. Adhirstam Tamil.