- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்த காரியம் பிரம்மாண்டமாக நடக்க முருகன் வழிபாடு

நினைத்த காரியம் பிரம்மாண்டமாக நடக்க முருகன் வழிபாடு

- Advertisement -

ஒரு காரியத்தை நினைத்து அது நடக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை நாம் செய்து கொண்டு இருப்போம். ஆனால் அந்த காரியம் ஏதோ ஒரு விதத்தில் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். அப்படி தள்ளிப் போய்க் கொண்டு இருக்கும் காரியம் நல்லபடியாக நாம் நினைத்தது போலவே நடப்பதற்கு நம்முடைய முயற்சியோடு தெய்வ வழிபாடும் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. நாம் நினைத்த காரியம் நினைத்ததை விட பல மடங்கு சிறப்பாக நடைபெறுவதற்கு முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

நினைத்த காரியம் நடைபெற முருகப்பெருமான் வழிபாடு

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார். அப்படி ஆசைப்பட்ட விஷயம் நடப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அதில் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்றால் விடாமுயற்சியுடன் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி முயற்சி செய்து வெற்றி பெறும் பொழுது அவர்களுக்கு இருக்கக்கூடிய சந்தோஷத்தை விட, நினைத்த காரியம் பல மடங்கு அவர்கள் எதிர்பார்க்காத விதத்தில் வெற்றியடையும் பொழுது அவர்களால் அந்த சந்தோஷத்தை அளவிடவே முடியாது.

- Advertisement -

இந்த வழிபாட்டை முருகப்பெருமானுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று அவருக்கு இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து மனதார உங்களுடைய காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.

அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். பிறகு அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைத்து முருகப்பெருமானை வழிபாடு செய்துவிட்டு வீட்டிற்கு வர வேண்டும். வீட்டிற்கு வந்ததும் ஒரு மஞ்சள் நிற துணியில் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயங்களில் ஏதாவது ஒன்றை வைத்து உங்களுடைய காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று முடிச்சு போட்டு முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதே போல் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் நீங்கள் இந்த விரதத்தை இருக்க வேண்டும். ஒன்பதாவது வாரம் மாலை நேரத்தில் இந்த ஒன்பது வாரங்களும் நாம் முடிந்து வைத்திருக்கும் நாணயங்களை எடுத்துக்கொண்டு போய் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலய உண்டியலில் போட்டு விட வேண்டும். இவ்வாறு ஒன்பது வாரங்கள் நாம் முருகப்பெருமானை தொடர்ச்சியாக விரதம் இருந்து வழிபட நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நாம் நினைத்த காரியம் நமக்கு நடந்திரும்.

இதையும் படிக்கலாமே: பண பிரச்சினை தீர்க்கும் பஞ்சமி வராகி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த முருக வழிபாட்டில் முழு நம்பிக்கை இருப்பவர்கள் ஒரு முறை இந்த விரதத்தை மேற்கொண்டு பாருங்கள் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அந்த காரியம் நடந்திடும்.

சற்று முன்