வராகி அம்மனின் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிபாடாக திகழ்கிறது. அதுவும் குறிப்பாக பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது என்பது மிக மிக சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி வராகி அம்மனுக்கு உகந்த திதியான பஞ்சமி திதி நாளை 11-6-2024 செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது.
பொதுவாக செவ்வாய்க்கிழமை என்பது பணரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவக் கூடிய கிழமையாக கருதப்படுகிறது. அன்றைய தினம் பஞ்சமி திதி வருவதால் வராகி அம்மனை நாம் எந்த முறையில் வழிபட்டால் பணப்பிரச்சினைகள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செவ்வாய்க்கிழமையில் நாம் கடன் பிரச்சினை தீர்வதற்கான பரிகாரங்களை செய்வோம். அதே சமயம் நாளை பஞ்சமி திதியும் வருவதால் வராகி அம்மனுக்கு முன்பாக இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் அம்மனின் அருளால் நம்முடைய பணரீதியான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். கடன் சுமை குறையும். தொழில் சிறப்பாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும்.
இந்த பரிகாரத்தை நாளை வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் அதாவது காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள், மதியம் 1:00 மணியிலிருந்து 2:00 மணிக்குள், இரவு 7:00 மணியிலிருந்து 7:25 மணிக்குள் செய்ய வேண்டும். ஏனென்றால் 7:25 மணிக்கு பஞ்சமி திதி முடிவடைந்து விடுகிறது. இந்த மூன்று நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
சுத்தமான நல்ல மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து அது முழுக்க மஞ்சளை தடவி குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அந்த விளக்கில் சிறிதளவு சோம்பை சேர்க்க வேண்டும். அடுத்ததாக மூன்று கிராம்பு, 3 ஏலக்காய் இதையும் வைக்க வேண்டும். இதற்கு மேலே ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து மற்றொரு அகல் விளக்கை எடுத்து இந்த அகல் விளக்கை மூடிவிட வேண்டும்.
மூடிய இந்த விளக்கை வராகி அம்மனுக்கு முன்பாக வைத்து உங்களுக்கு எதனால் பண பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறதோ அதை மனதார கூறி அதனால் ஏற்பட்ட பண பிரச்சனைகள் தீர வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்கானது வராகி அம்மனின் பாதத்தில் அப்படியே இருக்கட்டும்.
வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய சுக்கிர ஹோரையில் இந்த விளக்கை திறந்து அதில் இருக்கக் கூடிய ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து நாம் வைத்துக் கொள்ளலாம். மீதம் இருக்கும் பொருட்களில் சிறிதளவு நெய்யை ஊற்றி அதற்கு மேல் கற்பூரத்தை வைத்து ஏற்ற வேண்டும். இந்த சோம்பு ஏலக்காய் கிராம்பு இது மூன்றும் முழுவதும் எரிந்து முடியும் வரை அதில் சிறிது சிறிதாக கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த கற்பூரத்தை நாம் வீட்டிற்குள் வைத்தும் எரிக்கலாம். வீட்டிற்கு வெளியே வைத்தும் எரிக்கலாம். இப்படி நாம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பண பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: லட்சுமி கடாட்சம் ஏற்பட தீப வழிபாடு
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை வராகி அம்மனின் மீது முழு நம்பிக்கை வைத்து செய்து பணப்பிரச்சினையில் இருந்து வெளியில் வரலாம்.