இயற்கையிலேயே பளபளப்பான முகத்தை பெற்றிருக்கும் நாம் காலப்போக்கில் நம்முடைய அஜாக்கிரதையாலும் பராமரிக்கும் முறையில் தவறுகள் செய்வதாலும் அந்த பளபளப்பை இழந்து கலை இழந்து மோசமான சருமத்தை பெற ஆரம்பிக்கிறோம். இதை மறுபடியும் குழந்தை பருவத்தில் இருக்கும் சருமத்தை போல பளபளப்பாக மிருதுவாக மாற்றுவதற்கு நம்மிடம் இருக்கக்கூடிய மிகவும் எளிமையான ஒரு பொருளை தான் பயன்படுத்த வேண்டும். பொதுவாக அந்த பொருளை நாம் வேண்டாம் என்று தூக்கிப் போட்டு விடுவோம். ஆனால் அதில் இருக்கக்கூடிய பலவிதமான சத்துக்கள் நம்முடைய சருமத்திற்கு மட்டுமல்லாமல் தலைமுடிக்கும் மிகவும் நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியதாக திகழ்கிறது. அந்த பொருள் என்ன என்றும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
அழகு தேவதையாக காட்சியளிக்க
நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களுக்கு இணையாக வேறு எந்தவித அழகுப் பொருளும் இல்லை என்று தான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாக சமையலறையில் நாம் வைத்திருக்கக் கூடிய அனைத்து விதமான பொருட்களும் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும், முடியின் ஆரோக்கியத்திற்கும் அற்புதமான பலனை தரக்கூடியதாக திகழ்கிறது. அதை புரிந்து கொள்ளாமல் கடைகளில் காசு கொடுத்து பொருட்களை வாங்கி அதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளில் தான் மாட்டிக் கொள்கிறோம்.
அதன் அடிப்படையில் தான் வேண்டாம் என்று தூக்கி எறியக்கூடிய ஒரு அற்புதமான பொருளாக திகழக்கூடியது நாம் சாதம் வடித்த கஞ்சி. இதில் ஒரே ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நாம் செய்யக்கூடிய சாதத்தில் உப்பு சேர்த்திருக்க கூடாது. எந்த அரிசியாக இருந்தாலும் சாதம் வடிப்பது போல் வடித்து விட்டு அந்த கஞ்சியை அப்படியே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து அது கெட்டியாகிவிடும். இந்த கஞ்சி தண்ணீரை நாம் நம்முடைய தலைக்கு தேய்ப்பதன் மூலம் தலைமுடி உதிர்தல் பிரச்சினை நீங்குவதோடு முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். முடி பட்டு போல மிளிரும் என்று கூறப்படுகிறது.
அதே சாதம் வடித்த கஞ்சியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதற்கு இணையாக ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கற்றாழை ஜெல் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய கற்றாழையிலிருந்து எடுத்தாலும் சரி அல்லது கெமிக்கல் சேர்க்காத கற்றாழை ஜெல்லாக பார்த்து வாங்கி கலந்தாலும் சரி. இதனுடன் ஒரே ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் இருக்கக்கூடிய எண்ணெயையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
கலந்த இந்த பேஸ்ட்டை நம்முடைய முகம், கை, கால் என்று எங்கெல்லாம் தடவுகிறோமோ அங்கு எல்லாம் நம்முடைய சருமம் பட்டு போல மிளிர ஆரம்பிக்கும். முகத்தில் தடவி 10லிருந்து 20 நிமிடம் வைத்திருங்கள். பிறகு எப்பொழுதும் போல் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். தினமும் இதை ஒரு வாடிக்கையாக செய்து வருபவர்களுக்கு சருமத்தில் இருக்கக்கூடிய கருமையை நீங்கி நிறம் அதிகரிப்பதோடு மிகவும் பளபளப்பாகவும் பட்டு போலவும் மிளிர ஆரம்பிக்கும். இதே கிரீமை நம்முடைய தலைக்கும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:நேச்சுரல் நைட் க்ரீம்
ஒருமுறை தயார் செய்து வைத்துக் கொண்டு இதை நம்முடைய சருமத்திற்கும் தலைக்கும் பயன்படுத்தி அழகு தேவதையாக காட்சியளிப்போம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.