- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஆவாரம்பூ ஃபேஸ் பேக்

ஆவாரம்பூ ஃபேஸ் பேக்

- Advertisement -

சரும அழகை மேம்படுத்துவதில், பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செலவு செய்யும் பெண்களா நீங்கள்? பத்து பைசா கூட செலவு செய்யாமல், இன்ஸ்டன்ட் க்ளோ தரக்கூடிய அருமையான ஃபேஸ் பேக் ஒன்றை இயற்கையாக கிடைக்கும், இந்த பூவை பயன்படுத்தி போட்டு பாருங்கள். சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய இந்த பூ ஃபேஸ் பேக் எப்படி போடுவது? என்னும் அழகு குறிப்பு ரகசியத்தை இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.

ஆவாரம் பூ (Face Pack) போட தேவையானவை :
ஆவாரம் பூ – 1 கப்
தேன் – 1 மேசைக்கரண்டி
தயிர் – 1 மேசைக்கரண்டி (எண்ணெய் சருமத்துக்கு) அல்லது
பால் – உலர் சருமத்துக்கு

- Advertisement -

ஆவாரம் பூ ஃபேஸ் பேக் போடும் முறை :
ஃப்ரெஷான ஆவாரம் பூக்களை ஒரு கப் அளவிற்கு பறித்துக் கொண்டு வாருங்கள். அதனை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பூக்களை ஒரு மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதுடன், ஒரு மேஜை கரண்டி சுத்தமான தேன் சேர்த்து கலந்து வையுங்கள். நீங்கள் எண்ணெய் பசையுள்ள சருமத்தினராக இருந்தால், இதனுடன் ஒரு மேஜை கரண்டி அளவிற்கு தயிர் சேர்க்கலாம். உலர் சருமத்தினராக இருந்தால் அதாவது வறண்ட சருமம் கொண்டவர்கள், தயிருக்கு பதிலாக அதே அளவில் பால் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது இந்த கலவையை முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் கூட நீங்கள் தடவி நன்கு உலர விடலாம். 20 லிருந்து 30 நிமிடம் வரை காய உலற விடுங்கள். நன்கு காய்ந்து முகம் இருகியதும், வறண்ட சருமம் கொண்டவர்கள் குளிர்ந்த நீரிலும், எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரிலும் முகத்தை கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் நீங்கள் தொடர்ந்து போட்டு வர, மூன்று மாதங்களில் உங்களுடைய முகம் பட்டு போல மென்மையாக மாறும்.

- Advertisement -

ஆன்ட்டி ஏஜிங் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் நிறைந்துள்ள இந்த ஆவாரம் பூவை கொண்டு ஃபேஸ்புக் போடும் பொழுது 10 வயது குறைந்தது போல இளமையுடன் நீங்கள் காணப்படுவீர்கள். இன்ஸ்டன்ட் ரிசல்ட் கொடுக்கக்கூடிய இந்த ஆவாரம்பூ ஃபேஸ் பேக்கை ஒருமுறை நீங்கள் போட்டு பார்த்தாலே, நல்ல மாற்றம் சருமத்தில் காண முடியும். திடீரென ஒரு ஃபங்ஷனுக்கு கிளம்புகிறீர்கள் என்றால் செலவு செய்து பார்லருக்கு போக வேண்டிய அவசியம் இல்லை, இந்த ஒரு ஃபேஸ் பேக் போட்டு பாருங்கள், அப்படி ஒரு பளபளப்பை உங்களுக்கு கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
அதிர்ஷ்ட மனைவியின் ராசிகள்

ஆவாரம் பூ குளியல் பொடி :
ஆவாரம் பூவுடன் வெற்றிலை, வேம்பு இலை, சந்தனத்தூள் ஆகியவற்றை சேர்த்து குளியல் பொடியாக பயன்படுத்தலாம். இவற்றை நன்கு வெயிலில் உலர்த்தி பொடியாக்கி ஒரு Airtight container-ல் சேமிக்கவும். தினமும் சோப்புக்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம். இது இயற்கையான வழியில் அழகு பராமரிக்க மிகவும் பயனுள்ள நுட்பமாகும். இந்த குளியல் பொடி போடுவதால் சரும ரீதியான பல பிரச்சனைகள் தீரும்.

சற்று முன்