- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் கரைந்து போக வராகி வழிபாடு

கடன் கரைந்து போக வராகி வழிபாடு

- Advertisement -

இக்கட்டான சூழ்நிலையில் பண தேவை ஏற்படும் பொழுது வேறு வழியே இல்லை என்று பிறரிடம் இருந்து கடன் வாங்குவார்கள். அப்படி வாங்கிய கடனை அடைப்பதற்குரிய முயற்சிகளை செய்தாலும் எப்படி இந்த கடனை அடைப்பது என்று நினைக்கும் பொழுது ஒருவித பயம் உள்ளுக்குள் தோன்றும். இப்படி கடனை அடைப்பதற்கு வழியே தெரியவில்லை என்று நினைப்பவர்கள் கூட வராகி அம்மனை எந்த முறையில் வழிபட்டால் அவர்களுடைய கடன் பிரச்சினை தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கடன் திற வராஹி வழிபாடு

நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை நீக்கி நிம்மதியான வாழ்க்கையை அருள்வதற்குரிய தெய்வங்களை நாம் முழுமனதோடு வழிபடும் பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். அப்படி நம்முடைய கஷ்டத்தை தீர்க்கக் கூடிய தெய்வமாக தான் வராகி அம்மன் திகழ்கிறாள். வராஹி அம்மனை எந்த முறையில் வீட்டிலேயே வழிபட்டால் நம்முடைய கடன் பிரச்சினை தீரும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

அதிக அளவில் கடன் பிரச்சினை இருப்பவர்கள் இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய வராகி அம்மனின் படம் அல்லது சிலைக்கு சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த அம்மனுக்கு முன்பாக இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அந்த அம்மனுக்கு முன்பாக 7 எண்ணிக்கையில் மண் அகல் விளக்கு அல்லது கண்ணாடி கிண்ணம் அல்லது பீங்கான் கிண்ணம் இவை மூன்றில் எது கிடைக்கிறதோ அதை வாங்கி வைத்து அது நிறைய உடையாத பச்சரிசியை நிரப்ப வேண்டும். பிறகு அதற்கு மேல் ஒரு அச்சு வெல்லத்தை வைத்து அந்த வெல்லத்திற்கு மேல் தங்க அரளி என்று சொல்லக்கூடிய மஞ்சள் அரளி பூவை வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு கிண்ணத்திலும் நாம் வைக்க வேண்டும். பிறகு வராகி அம்மனுக்கு முன்பாக அமர்ந்து ஒரு மஞ்சள் நிற பேப்பரை எடுத்து அதில் சிவப்பு நிற பேனாவை பயன்படுத்தி யாரிடம் எவ்வளவு கடன் தொகை வாங்கினீர்கள் என்பதை 21 முறை எழுத வேண்டும். இப்படி 48 நாட்கள் விடாமல் செய்து வர அந்த கடன் தொகை அடைவதற்குரிய வழியை அந்த அம்மன் நமக்கு அருள் செய்வார்.

ஒவ்வொரு நாளும் இதில் இருக்கக்கூடிய பச்சரிசி வெல்லம் இவற்றை எரும்புகள் இருக்கும் இடத்தில் போட்டு விட்டு புதிதாக பச்சரிசி வெல்லத்தை வைக்க வேண்டும். இதே பசு மாட்டிற்கு கூட கொடுக்கலாம். தினமும் வராகி அம்மனுக்கு கற்கண்டையை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை மட்டும் கற்கண்டு சாதம் செய்து நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தலையெழுத்தை மாற்றும் பிராமி தேவி வழிபாடு

இந்த வழிபாட்டில் முழு நம்பிக்கை இருப்பவர்கள் வராகி அம்மனின் அருளால் இந்த வழிபாட்டை செய்து தங்களின் கடன் சுமையிலிருந்து வெளியில் வரலாம்

சற்று முன்