- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்கள் தீர எலுமிச்சை பரிகாரம்

கஷ்டங்கள் தீர எலுமிச்சை பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையை நாம் சிறப்பாக வாழும் வாழ வேண்டும் என்றாலோ அல்லது வாழ்நாளில் அனைத்து விதமான நன்மைகளையும் பெற வேண்டும் என்றாலோ அதற்கு பெருமாளின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். பெருமாளின் அருளை பரிபூரமாக பெற்றவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருளும் கிடைக்கும். இப்படி இவர்கள் இருவரின் அருளையும் நாம் பெற்று விட்டோம் என்றால் நம் வாழ்க்கையில் எந்தவித குறைகளும் நமக்கு ஏற்படாது. அப்படிப்பட்ட பெருமாளின் அருளை பெறுவதற்கும் நம்முடைய கஷ்டங்கள் தீருவதற்கும் செய்யக்கூடிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பெருமாள் வழிபாடு கஷ்டம் தீர

காக்கும் தொழிலை செய்யக்கூடியவராக திகழ்ந்தவர் தான் பெருமாள். நம்முடைய வாழ்நாளில் நாம் எந்த அளவிற்கு பெருமாளை வழிபடுகிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் என்பது ஏற்படும். அப்படிப்பட்ட முன்னேற்றத்தை அருளக்கூடியவரை எந்த முறையில் நாம் வழிபட்டால் நம்முடைய வாழ்வில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை பௌர்ணமி தினத்தன்று தான் செய்ய வேண்டும். புள்ளிகள் இல்லாத நல்ல பழுத்த மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய பழமாக பார்த்து மூன்று எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொள்ளுங்கள். பௌர்ணமி அன்று காலையிலேயே அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு பெருமாளின் பாதத்தில் இந்த மூன்று எலுமிச்சம் பழங்களையும் வைக்க சொல்ல வேண்டும்.

பிறகு உங்கள் பெயரிலும் உங்கள் குடும்பத்தாரின் பெயரிலும் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை திரும்ப வாங்கி வர வேண்டும். வீட்டிற்கு வந்ததும் ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டிற்கு மேலே சிவப்பு நிற துணியை விரித்து கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைத்துக் கொள்ளுங்கள். அந்த உப்பிற்கு மேல் கோவிலில் இருந்து வாங்கி வந்த எலுமிச்சம் பழங்களை வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த தட்டை அப்படியே நம்முடைய வீட்டு நிலை வாசலுக்கு உள்புறமாக நிலை வாசலுக்கு எதிரே ஒரு ஸ்டூலை போட்டு அதற்கு மேல் வைத்து விடுங்கள். தரையிலும் வைத்துக் கொள்ளலாம் அது உங்கள் சௌகரியம். அன்றைய தினம் முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் இந்த எலுமிச்சம் பழங்களையும், உப்பையும் எடுத்து நாம் அன்றாட சமையலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். துணியை எடுத்து வேறு ஏதாவது ஒரு செயலுக்காக உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இப்படி தொடர்ந்து மூன்று பௌர்ணமி தினங்கள் இந்த பரிகாரத்தை செய்துவர நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் விலகும். பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைப்பதால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே பண வரவை அதிகரிக்கும் கற்றாழை செடி

எளிமையான இந்த வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் பெருமாளை வழிபட்டு இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்

சற்று முன்