செவ்வாய், வெள்ளிக்கிழமை என்றதும் அனைவருக்கும் துர்க்கை அம்மன் தான் முதலில் ஞாபகத்திற்கு வருவார்கள். காரணம் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறும். அந்த பூஜைகளில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இப்படி தீபமேற்றி வழிபட்டும் தங்கள் வாழ்க்கையில் எந்தவித நன்மையும் நடைபெறவில்லை, கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து கொண்டு இருக்கிறோம் என்று கூறுபவர்களுக்குரிய சிறப்பான பதிவுதான் இந்த பதிவு. அப்படி துர்க்கை அம்மனை வழிபடும்போது நாம் செய்யக்கூடிய தவறால் நம்முடைய வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத சூழ்நிலை உண்டாகும். அந்த தவறை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
துர்க்கை அம்மன் வழிபாடு
அசுரர்களை வதம் செய்வதற்காக அவதரித்தவராக திகழ்ந்தவர் தான் துர்க்கை அம்மன். அதனால் துர்க்கை அம்மனை யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் துன்பங்களும் துயரங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படி நீங்குவதற்காக பெண்கள் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வார்கள். அப்படி அவர்கள் வழிபாடு செய்யும்பொழுது சில தவறுகளை செய்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் இன்னும் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
முதலில் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் பெண்கள் அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு செல்வார்கள். அங்கு இருக்கக்கூடிய துர்க்கை அம்மனுக்கு இயன்றவர்கள் அபிஷேக பொருட்களையும் செவ்வரளி பூக்களையும் வாங்கி கொடுப்பதோடு மட்டுமல்லாமல் எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இந்த எலுமிச்சை பழ தீபம் என்பது தவறான ஒன்று என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.
பொதுவாக நாம் திருஷ்டி கழிக்கும் பொழுது பெரிய பெரிய பலிகளை தருவதற்கு பதிலாக எலுமிச்சம் கனியை தருவோம். அது பலரும் அறிந்ததுதான். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் ஒரு ஆலயத்திற்கு சென்று எலுமிச்சம் பழத்தை இரண்டாக நற்கும்பொழுது அங்கு நாம் பலியிடுவதற்கு சமமாக கருதப்படுகிறது. அதனால் நமக்கு கஷ்டங்களை வரும். அப்படி செய்யக்கூடாது என்பது ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.
எலுமிச்சை பழ தீபம் என்பது தாந்த்ரீக ரீதியாக கூறப்படும் ஒரு செயலாகும். ஆன்மீக ரீதியாக கூறப்படும் பொழுது எலுமிச்சம் பழம் என்பது மகாலட்சுமியின் அம்சமாகவும், குருபகவானின் அம்சமாகவும், அம்பிகைக்கு உகந்த பழமாகவும் கருதப்படுகிறது என்பதால் அந்த தெய்வீக பழத்தை நாம் ஆலயத்தில் இரண்டாக நறுக்கி அதன் சாறை பிழிந்து தீபம் ஏற்றுவது என்பது தவறான ஒன்றாகும்.
அதற்கு பதிலாக துர்க்கை அம்மனுக்கு வாசனை மிகுந்த மலர்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் இயன்றவர்கள் அபிஷேக பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். புதிதாக வாங்கிய இரண்டு அகல் விளக்குகளை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான நல்லெண்ணையை ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு துர்க்கை அம்மனுக்குரிய பாடல்களை பாட வேண்டும். அதிலும் குறிப்பாக “சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி” என்று ஒரு பாடல் இருக்கும்.
அந்த பாடலை பாடி துர்க்கை அம்மனுக்கு வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்யும் பொழுது துர்க்கை அம்மன் மனம் மகிழ்ந்து நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவாள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:ஆடி முதல் வெள்ளி ஏற்ற வேண்டிய தீபம்
மனிதனாக பிறந்தவர்களுக்கு தவறு செய்வது என்பது சகஜம்தான் அந்த தவறை உணர்ந்து அதை திருத்திக் கொண்டு நல்ல நிலையில் தெய்வ வழிபாட்டை செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் கஷ்டங்களும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.