உங்களுக்கு வேக வைத்த முட்டை பிடிக்காதா? டேஸ்டியான நெய் முட்டை வறுவல் இப்படி ஈஸியா செஞ்சு பாருங்க சலிக்காம சாப்பிட்டுகிட்டே இருப்பீங்க!

egg-muttai-fry-gravy
- Advertisement -

வேக வைத்த முட்டைகளை நெய் ஊற்றி முட்டை வறுவல் செய்து பாருங்கள், ரொம்பவும் அற்புதமாக இருக்கும். பொதுவாக வேக வைத்த முட்டை என்றால் சிலருக்கு பிடிக்காது. எனவே வேக வைத்த முட்டையை இது போல வறுவல் செஞ்சி கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சலிக்காம சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க! நீங்களும் இதே மாதிரி சுவையான நெய் முட்டை வறுவல் எப்படி செய்வது? என்று பார்த்து விடுங்கள்.

முட்டை வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – ஆறு, பெரிய வெங்காயம் – ரெண்டு, தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – நாலு, தனியா – ரெண்டு டேபிள் ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன், கிராம்பு – ஐந்து, பட்டை – ஒன்று, மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, நெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

முட்டை வறுவல் செய்முறை விளக்கம்:
முதலில் ஆறு முட்டைகளை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். முட்டை வேகும் போது உடையாமல் இருக்க வினிகர் அல்லது பேக்கிங் சோடா அரை ஸ்பூன் பயன்படுத்தலாம். வேக வைத்த முட்டைகளை கத்தியை பயன்படுத்தி ஆங்காங்கே லேசாக கீறல் போடுங்கள். பின்னர் அதன் மீது மிளகாய் தூள் மற்றும் முட்டைக்கு தேவையான அளவிற்கு உப்பு தூவி எல்லா இடங்களிலும் படும்படி பிரட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வைத்து மிளகு, சீரகம், தனியா, பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்கள் மற்றும் பச்சை கருவேப்பிலையை சேர்த்து லேசாக சூடு பறக்க வறுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து வறுக்க வேண்டியது அவசியம் ஆகும். வாசம் நன்றாக வீச துவங்கும், அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து நன்கு ஆற விட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதே வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டுக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் போல் நெய்யை தாராளமாக விட்டுக் கொள்ளலாம். நெய் நன்கு காய்ந்ததும் முட்டைகளை போட்டு வறுத்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே வாணலியில் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள்.

அதன் பின்னர் நீங்கள் தக்காளி துண்டுகளை சேர்த்து மசிய வதக்க விட வேண்டும். மூடி போட்டு ஒரு ரெண்டு நிமிடம் கழித்து வதக்கி விட்டால் சீக்கிரம் மசிந்து வதங்கும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு அரைக்கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் மூடி போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். அதன் பிறகு நீங்கள் வறுத்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு பிரட்டி எடுத்தால் அற்புதமான நெய் முட்டை வறுவல் தயார்! இதே மாதிரி நீங்களும் உங்க வீட்டில் செய்து பார்த்து அசத்துங்க.

- Advertisement -