பசுவிலிருந்து கிடைக்கும் நெய் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் ஜோதிடத்திலும் அதிர்ஷ்டம் தருமாம்! பசுநெய் தரும் யோகம் என்ன?

ghee-nei-deepam
- Advertisement -

பசுவிலிருந்து கிடைக்கப்படும் சுத்தமான நெய் ஆரோக்கியத்திற்கு மட்டும் உகந்தது அல்ல! ஆன்மீகத்திலும் மிக முக்கிய பங்காற்றுகிறது. நெய் தீபம் ஏற்றினால் குடும்பத்தில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நெய் ஆன்மிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பல்வேறு பயன்பாடுகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அப்படியிருக்க ஜோதிடத்தில் நெய்யின் பங்கு என்ன? இந்த அபூர்வ தகவலை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நீங்களும் படியுங்கள்.

neideepam

ஒவ்வொரு வீட்டிலும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இறை வழிபாட்டிற்கு நெய் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கி, நல்ல சக்திகள் பெருகி, செல்வ வளம் சிறக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை. கோமாதா எனப்படும் பசுவை தெய்வமாக மதிக்கும் இந்துக்கள் பசுவிலிருந்து கிடைக்கப்படும் நெய்யை அமிர்தமாகவே கருதி வருகின்றனர். அத்தகைய நெய் உணவில் மட்டுமல்ல, மற்ற விஷயங்களிலும் நமக்கு பல்வேறு நன்மைகளை செய்யக் கூடியதாக இருக்கின்றது.

- Advertisement -

எந்த ஒரு வீட்டில் தீராத நோயால் ஒருவர் துன்பப்படும் பொழுதும், அந்த நோயாளியின் பக்கத்தில் ஒரு விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து தீபத்தை ஏற்றுங்கள். தொடர்ந்து இந்த தீபம் அவர்கள் அருகில் எரியும் பொழுது அதிலிருந்து வெளிவரும் ஒரு புகையானது வளிமண்டலத்தில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை ஆற்றல்களை பெருக செய்யும். இதனால் நோயாளிகளுக்கு நல்ல சக்திகள் கிடைக்கப்பெறும் என்று நம்பப்பட்டு வருகிறது.

ghee

குடும்பத்தில் இருக்கும் கணவன் மனைவி சண்டைகள், மற்ற பிரச்சினைகள் அனைத்தும் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் இருப்பதால் தான் தொடர்ந்து அடிக்கடி நடக்கும். இவ்வாற்றல்கள் வீட்டை விட்டு வெளியேறவும், கணவன்-மனைவிக்குள் ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாகவும், நல்லதொரு மாற்றம் காணவும், இரவு நேரத்தில் நீங்கள் தூங்க செல்வதற்கு முன்னர் சமையலறையில் பாத்திரங்களை ஒருபொழுதும் அப்படியே போட்டு வைக்காதீர்கள். அந்த இடத்தை சுத்தமாக கழுவி சுத்தம் செய்து அங்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வையுங்கள். இந்த நெய் தீபம் ஆனது இரவு முழுவதும் எரிந்து தானாகவே அணையட்டும். இப்படி தொடர்ந்து செய்யும் பொழுது வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக தீர்வதை நீங்களே உணரலாம்.

- Advertisement -

கோவில்களுக்கு எண்ணெய்யை தானம் செய்வதன் மூலம் உங்களுக்கு உடல் வலிமை அதிகரிக்கும். மனக் கவலைகள் அனைத்தும் நீங்கி மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். முந்தைய கால கட்டங்களில் அடிக்கடி வீடு மற்றும் கோவில்களில் ஹோமம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஹோமத்தில் ஊற்றப்படும் சுத்தமான பசு நெய்யானது ஒரு விதமான நல்ல புகையை ஏற்படுத்தும். இந்த புகை சுற்றுச்சூழலில் இருக்கும் நுண்கிருமிகள், வைரஸ்கள் போன்றவற்றை எதிர்த்து போராடும். இதனால் ஹோம புகையை சுவாசிப்பவர்களுக்கு நோய் நொடிகள் இன்றி சுபீட்சம் உண்டாகும்.

nei-deepam

கோவில்களில் நெய் தீபம் ஏற்றப்படுவது, வீடுகளில் நெய் தீபம் ஏற்றினால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுவதும் சாதாரண விஷயமல்ல. நாம் செய்யும் எவ்வளவோ செலவுகளில் இதுவும் ஒன்று என்று நினைத்து வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். வீடு முழுவதும் நெய்யினால் ஏற்றப்பட்ட தீபத்தின் ஒளி மற்றும் புகை பரவும் பொழுது வீட்டில் மகா லட்சுமியின் அருளும், நேர்மறை ஆற்றல்களும் பரிபூரணமாக நமக்கு கிடைக்கப் பெறும்.

- Advertisement -