நாம் பேய், பிசாசு அல்லது அது போன்ற அமானுஷ்ய சக்திகளை நம் கனவில் காண நேர்ந்தால் என்ன பலன் தெரியுமா?

pei-kanavu2

பொதுவாகவே சிலருக்கு பேய் என்றாலே பயம் தான். பேய் படங்களை பார்த்தாலோ அல்லது பேய் கதைகளை கேட்டாலோ அந்த நாளில் தனியாக எங்கும் செல்வதற்கு பயப்படுவார்கள். இதில் வேடிக்கையான விஷயமாக இருப்பது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் இருப்பவர்கள் இதில் அதிகம் பயப்படுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்த காலத்தில் இருக்கும் குட்டி சுட்டீஸ் சுத்தமாக பயப்படுவதே கிடையாது. அவர்களாகவே அடம்பிடித்து பேய் கதைகளை நம்மிடம் சொல்ல சொல்லிக் கேட்டு வாங்குகிறார்கள். தேடி தேடி பேய் படங்களாக இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

pei-kanavu

நம்ம ஊர் பேய் கதைகள் தான் கிலி ஊட்டுவதாக இல்லை என்றாலும், ஹாலிவுட் படங்களும் அதைவிட காமெடியாக மாறிவிட்டது. பேய் படத்தை பார்த்து பயம் வருவதற்கு பதிலாக சிரிப்புதான் வருகிறது. அந்த அளவிற்கு நிலைமை தலைகீழாகி விட்டது. அந்தக் காலத்தில் எல்லாம் 12 மணிக்கு உச்சி வேளையில் எங்கும் செல்வதைக் கூட அனுமதிக்கமாட்டார்கள். காத்து கருப்பு அண்டி விடும் என்று பயப்படுவார்கள். இன்று நள்ளிரவு 12 மணிக்கும் தனியாக சுடுகாட்டுக்கு கூட செல்வார்கள். நிலைமை இப்படி இருக்க பேய்கள், பிசாசுகள் உங்கள் கனவில் வந்தால் என்னவெல்லாம் அர்த்தம் சொல்கிறது கனவு பலன்கள் என்று தெரிந்து கொள்ள வாருங்கள். சுவாரசியமான தகவல்களுடன் இப்பதிவில் பயணிப்போம்.

பொதுவாக பேய், பிசாசு போன்ற அமானுஷ்ய சக்திகள் உங்கள் கனவில் நீங்கள் பார்க்க நேர்ந்தால் இதுவரை உங்களுக்கு வெளிவராத சில தகவல்கள் அல்லது ரகசியங்கள் இனி வரும் நாட்களில் உங்களுக்கு தெரியவரும் என்பதை உணர்த்துவதாக அர்த்தமாம். உங்கள் கனவில் உங்களை நீங்களே பேயாக பார்க்க நேர்ந்தால் ஏதோ ஒரு தவறு செய்துவிட்டு இதுவரை மாட்டிக் கொள்ளவில்லை என்கிற ஒரு விஷயத்தில் இனி வரும் நாட்களில் வசமாக மாட்டிக் கொள்ள போகிறீர்கள் என்று அர்த்தமாம். உங்கள் கனவில் நீங்கள் பேய், பிசாசுகளிடம் சிக்கி இருப்பது போல் காண நேர்ந்தால் இதுவரை உங்கள் வாழ்வில் அனுபவித்த கஷ்டங்கள் மாறும். ஏதோ ஒரு விஷயத்திற்காக நீங்கள் மன இறுக்கத்தில் இருக்கிறீர்கள். அதிலிருந்து நீங்கள் வெளியே வரப் போகிறீர்கள். விரைவில் உங்களுக்கு நிம்மதி கிடைக்கப் போகிறது. எதிர்பாராத விதத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகும் என்று அர்த்தமாம்.

fear-pei-kanavu

நீங்கள் தினமும் படுத்து உறங்கும் அறையில் பேய், பிசாசு இருப்பது போல் கனவில் காண நேர்ந்தால் புதிய நபர்களிடம் அறிமுகம் கிடைக்கப் போகிறது. அவர்களுடன் நட்பு பாராட்டுவதற்கு முன் அவர்களைப் பற்றி நன்கு புரிந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கும். அவர்களால் உங்களுக்கு பிரச்சனையும் வரலாம், அல்லது அதிர்ஷ்டமும் உண்டாகலாம். எனவே அவர்களை எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லதாம். உங்கள் கனவில் உங்களுக்கு நன்கு பரிச்சயமான நபர்கள் பேய், பிசாசு போல் வேடம் போட்டு பயமுறுத்துவதாக காண நேர்ந்தால் யாரிடமாவது நீங்கள் விரைவிலேயே ஏமாற இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறதாம். எனவே யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடாமல் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டுமாம். நீங்கள் பேய் பிசாசு போன்ற அமானுஷ்ய சக்திகளிடம் உரையாடுவது போல் கனவு கண்டால் மிகப்பெரிய பிரச்சனை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பது அர்த்தம். அதை உங்கள் உள்ளுணர்வு எடுத்துரைக்க இது போன்ற கனவுகள் வருகின்றன. வரவிருக்கும் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் நண்பனை நீங்கள் பேயாக கனவில் காண நேர்ந்தால் பலரின் கேள்விக்கு ஆளாகும்படி ஏதோ ஒரு தவறான விஷயத்தை செய்யப்போவதாக அர்த்தம். இப்பொழுது நீங்கள் செய்ய இருக்கும் தவறை திருத்திக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது என்பதை உணர்த்துகிறது. நீங்கள் எங்கோ ஒரு மர்மமான இடத்தில் பேயுடன் இருப்பது போல் கனவு காண நேர்ந்தால் உங்களுக்கு உடல்நிலை கோளாறு ஏற்படுமாம். நீங்கள் இருக்கும் இடத்தை பேய், இருளில் ஒளிந்து கொண்டு பார்க்கும்படி கனவில் காண நேர்ந்தால் நீங்கள் நெருக்கமானவர்களிடம் இருந்து எதிர்பாராத காயத்தை எதிர்பார்க்கலாம். அதுவே பேய் உங்களை பார்த்து புன்னகைப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வர இருக்கிறது என்று அர்த்தமாம். பேய் உங்களிடம் கோபம் கொண்டால் நீங்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனையை முன்கூட்டியே எடுத்துரைப்பதாக அர்த்தமாம். அது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பயமுறுத்தினால் உங்கள் குடும்பத்திற்கு வரும் ஆபத்தை நீங்கள் தடுக்க கூடிய சந்தர்ப்பம் அமையும் என்பது அர்த்தமாம்.

இதையும் படிக்கலாமே
உயிரோடு இருப்பவர்கள் இறந்தது போல் கனவு வந்தால், இதெல்லாம் நடக்குமா? கனவு பலன் தெரிந்து கொள்ளுங்கள்.

பேயிடம் இருந்து நீங்கள் தப்பி ஓடுவது போல கனவு காண நேர்ந்தால் நீங்கள் செய்யும் வேலையில் பிரச்சனைகள் இருக்கிறது. நீங்கள் அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டுவதை இந்த கனவு உங்களுக்கு உணர்த்துவதாக அர்த்தமாம். நீங்கள் எந்த பக்கம் ஓடினாலும் அந்த பக்கம் எல்லாம் பேய் இருப்பது போல கனவில் காண நேர்ந்தால் உங்களது நிஜ வாழ்க்கையிலும் பல பேய்கள் உங்கள் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டிருப்பதாக அர்த்தமாகிறது. ஆனால் நீங்கள் கவலை கொள்ள தேவை இல்லை. நீங்கள் பல தடைகளை தாண்டி முன்னேற இருக்கிறீர்கள். அதுவே நீங்கள் எதிர்த்து நின்று பேயுடன் சண்டை போட ஆயத்தமாகி விட்டீர்கள் என்றால் நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு பிரச்சனைகள் வந்து சேரும். உங்கள் பிடிவாதத்தை தளர்த்தினால் நீங்கள் முன்னேறலாம் என்பதை குறிப்பதாகும்.

pei-kanavu1

நீங்கள் அந்த பேயை தைரியமாக எதிர்த்து கொன்று விட்டீர்கள் என்றால் உங்களை சுற்றி இருக்கும் அனைத்து எதிரிகளையும் வெல்லப் போகிறீர்கள் என்பதைக் குறிப்பதாகும். உங்கள் கனவில் அமானுஷ்ய சக்திகள் உங்களுக்கு உதவி புரிவதாக நீங்கள் காண நேர்ந்தால் நீங்கள் மற்றவர் கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது இல்லை. நீங்கள் நினைப்பதெல்லாம் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துவதாக அர்த்தமாகும். மாறாக நீங்கள் அதற்கு உதவி செய்வது போல் கனவு கண்டால் தேவையில்லாத சிக்கல்கள் மற்றவர்களால் உங்களுக்கு வர இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறதாம் அர்த்தமாம். ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி கருப்பான உருவத்தில் உங்களை நெருங்கினாலும் அல்லது அழுத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ உங்களுக்கு விரைவில் தேவையில்லாத பிரச்சினைகள் வரக்கூடும் என்பதையும் அதிலிருந்து உங்கள் நம்பிக்கைக்கு உரியவர் உங்களை காப்பாற்ற இருக்கிறார் என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே
எச்சரிக்கை! இவை, உங்கள் கனவில் வந்தால், பெரும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். கெட்ட கனவு பலிக்காமல் இருக்க என்ன செய்வது?

இது போன்று மேலும் உங்களுக்குரிய ஜோதிட சாஸ்திர பலன்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pei kanavu palangal in Tamil. Pei kanavu palan in Tamil Pei kanavu vanthal Pei kanavu kandal Pei kanavu in Tamil.