எச்சரிக்கை! இவை, உங்கள் கனவில் வந்தால், பெரும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். கெட்ட கனவு பலிக்காமல் இருக்க என்ன செய்வது?

ketta-kanavu

கனவுகளைப் பற்றிப் பல வகையில், பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு இருந்தாலும், சில வகையான கனவுகள் நமக்கு வரும் போது, இனம் புரியாத பயமும், வருத்தமும் ஏற்படுவது இயற்கை தான். அந்த வரிசையில், உங்கள் கனவில் என்ன பொருட்கள் வந்தால், உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கும், என்பதை பற்றியும், எப்படிப்பட்ட கனவுகள் வந்தாலும், எந்த பாதிப்பும் நம்மை தாக்காமல் இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

dream

உங்களுடைய கனவில் முழுமையாக சிவப்பு நிற உடை அணிந்த பெண் வந்தால், முகம் நிறைய சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசிக் கொண்டு உருவம் தெரிந்தாலோ, பன்றி, பூனை, இவைகளில் உங்கள் கனவில் எது வந்தாலும், மரணத்திற்கு நிகரான சம்பவம் நிகழும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெரிய கொம்பை கொண்ட எருமை, கருப்பு நிற நாய், நரி, இப்படி கருப்பு உருவத்தில் இருக்கும் விலங்குகள் உங்களை துரத்துவது போல் கனவு கண்டால், உங்களது வாழ்க்கையில் கஷ்டம் பின்தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

tibetan mastiff dog

சில பேரது கனவில், நட்சத்திரம், சூரியன், சந்திரன் கீழே விழுவதுபோல் கனவு வரும். இப்படிப்பட்டவர்களுக்கு மனதில் மரணபயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

கடல், குளத்தில் தாமரை, கடல் மணலில் காலடித் தடம், அல்லது மிருகங்களின் காலடித்தடம் இப்படிப்பட்ட கனவுகள் வந்தால், செல்வ இழப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அல்லது ஏதாவது பொருள் நஷ்டம் ஏற்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது போல, பற்கள் அனைத்தும் விழுவது போல, கனவு வந்தால் உங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனை ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

wall clock

கடிகாரம் கனவில் வந்தால், வாழ்க்கையில் நீங்கள் தடுமாறும் அளவிற்கு ஏதோ ஒரு பிரச்சனையை சந்திக்க போவதாக அர்த்தம் என்று சொல்லப்பட்டுள்ளது.

மழைத்துளிகள் பூமியில் விழுவதை, காண்பது போல கனவு வந்தால் உங்கள் குடும்ப உறவினர்களிடையே பிரச்சனை வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

police

கனவில் காவல் நிலையம், கோர்ட், இவைகள் வந்தால், நீங்கள் செய்யப்போகும் வேலையை உஷாராக செய்யவேண்டும். பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

இப்படியாக நம்முடைய மனதை உறுத்தும் கனவு வந்தவுடன், நமக்கு விழிப்பு வந்த நேரமே, எழுந்து போய் கைகால் முகம் கழுவிவிட்டு, சிறிது மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து, அந்த தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு, விபூதியை நெற்றி நிறைய பூசிக்கொண்டு, சிவபெருமானையும், குலதெய்வத்தையும், நினைத்து, ‘ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்தால்’ போதும். மீண்டும் உறங்கச் செல்லும் போது, குல தெய்வத்தை நினைத்துக்கொண்டே தூங்கச் செல்லுங்கள். வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
முருகப்பெருமானை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்! பல வருடங்களாக உங்கள் குடும்பத்திற்கு இருந்து வரும் தீராத பிரச்சனையும் 6 வாரங்களில் தீரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kanavu palan in Tamil. Kanavugal sollum palan. Kanavugal tharum palan. Ketta kanavu pariharam