இந்தப் பொருட்களையெல்லாம் அடுத்தவர்களுக்கு அன்பளிப்பாக, வாங்கி கொடுப்பவர்களுக்கு, பண கஷ்டம் என்பதே வாழ்க்கையில் வராது.

gift

நம்முடைய பழக்க வழக்க முறைகளில் சுபகாரியங்களுக்கு, வீட்டு விசேஷங்களுக்கு அடுத்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம். பெரிய பெரிய ராஜாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அடுத்தவர்களை சந்திக்க செல்லும்போது, தங்களால் இயன்ற அளவு, தங்களுடைய சக்திக்குத் தகுந்தவாறு அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். எந்த அன்பளிப்பு பொருட்களை அடுத்தவர்களுக்கு, எப்படி கொடுக்க வேண்டும்? எந்த பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்தால், நமக்கு வரக்கூடிய பிரச்சனைகள், குறிப்பாக பண பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

gift1

இந்த அன்பளிப்பு கொடுப்பதில் கூட நம்முடைய மக்கள் இரண்டு விதமாக பிரித்து வைத்துள்ளார்கள். அதாவது, நடுத்தர வர்க்கத்தில் வசிக்கும் சில பேர், தங்களுடைய கௌரவம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக, வசதி படைத்தவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் போது,   பணக்காரர்களுக்கு மேலும் பணத்தை சேர்க்கும் வகையில், கடன் வாங்கியாவது அன்பளிப்பை கொடுப்பார்கள். இது முதல் விதம்.

இரண்டாவது விதமாக, வசதி படைத்தவர்கள், பணக்காரர்கள் தங்களுக்கு ஈடாக இருக்கும் சொந்த பந்தங்களின் விசேஷங்களுக்கு செல்லும் போது மட்டும், தங்களுடைய ஆடம்பரத்தை காட்ட வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அளிப்பார்கள். இதுவே ஒரு சராசரி வருமானம் கொண்ட குடும்ப விசேஷம் என்றால், அவர்களுக்கு தகுந்த மாதிரி பரிசுப் பொருட்களை வாங்கி கொடுப்பார்கள்.

gift2

இந்த பரிசுப் பொருட்களை நம்முடைய அந்தஸ்துக்கு தகுந்தவாறு, அடுத்தவர்களுக்கு வாங்கி கொடுக்க வேண்டுமா? இல்லை, அன்பளிப்பை பெருவர்களுடைய அந்தஸ்தை பார்த்து, நாம் பரிசு பொருட்களை வாங்குவதா? சரி, எது எப்படியாக இருந்தாலும் நாம் கொடுக்கக்கூடிய அன்பளிப்பு அடுத்தவர்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தால் அதுவே போதும்.

- Advertisement -

அடுத்தவர்களுக்கு பணக்கஷ்டம் வரக்கூடாது என்ற எண்ணம் யாருக்கு இருக்கின்றதோ, அவர்களுக்கு நிச்சயமாக வாழ்க்கையில் பணக்கஷ்டம் என்பதே வராது. அந்த வரிசையில் பணக் கஷ்டத்தை தீர்க்க கூடிய சில பொருட்களை நீங்கள், அடுத்தவர்களுக்கு மனநிறைவோடு வாங்கி கொடுக்கலாம். அந்தக் குறிப்பிட்ட பொருளை, பரிசுப் பொருளாக வாங்கியவர்களுடைய மனநிறைவே உங்களுக்கு, அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

ganapathi

அந்த வரிசையில் முதல் முதலாக ஸ்வர்ண விநாயகரின் திருவுருவப்படம், நாட்டிய கணபதியின் திருவுருவப்படம் இப்படிப்பட்ட பொருட்களை அன்பளிப்பாக நாம் ஒருவருக்கு மனதார கொடுத்தால் நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். இந்த பரிசை பெற்றவர்களுடைய வீட்டிலும் ஐஸ்வரியம் பெருகும்.

guberar

அடுத்தபடியாக தங்க நிறத்தில் இருக்கும் குபேரன் சிலை, தங்க நிறத்தில் பளபளப்பாக பிரதிபலிக்கும் பிரமிடு, தங்க நிறத்தில் ஜொலிக்கும் மீன் பொம்மைகள், இப்படிப்பட்ட பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக உள்ளது. இதை அடுத்தவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். தங்க நிறம் என்றால் தங்கத்தால் செய்யப்பட்டது அல்ல. கோல்டன் கலரில் இருக்கும் பொருட்கள்.

fish-key-chain

அடுத்தபடியாக சுக்கிரனின் அம்சம் நிறைந்த, மகாலக்ஷ்மியின் அம்சம் பொருந்திய வெள்ளிப் பொருட்களை அடுத்தவர்களுக்கு பரிசாகக் கொடுப்பது நமக்கு பெரிய நன்மையை கொடுக்கும். இதனால் தான் நிறைய பேர் வெள்ளியில் காமாட்சியம்மன் விளக்கை தங்களுடைய உறவினர்களுக்கு பரிசாக கொடுப்பார்கள். மங்களகரமான வெள்ளி குடும்ப சிமிழையும் அடுத்தவர்களுக்கு பரிசாக கொடுப்பார்கள்.

deepam

நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கோ உங்களுடைய உறவினர்களுக்கோ பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், வெள்ளியில் செய்த சிறிய மோதிரத்தை கூட அன்பளிப்பாகக் கொடுக்கலாம். வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்பவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.

littlefinger-silverring

குறிப்பாக அடுத்தவர்கள், மனநிறைவோடு அன்பளிப்பு கொடுக்கக்கூடிய வெள்ளி மோதிரத்தை, வாங்கி தங்களுடைய சுண்டு விரலில் அணிந்து கொள்பவர்களுக்கு பெரிய அளவிலான சந்தோஷம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

silver-ring

இப்படியாக அடுத்தவர்களை சந்தோஷப்படுத்த, அடுத்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடிய விஷயங்களை அன்பளிப்பாக, வாங்கி கொடுக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். இந்தப் பொருட்களையெல்லாம் பெற்றவருடைய மன நிறைவும், அந்த ஆசீர்வாதமும் நம்மை வாழ வைக்க நம்மை கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற உதவியாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த குபேர பொம்மையை வீட்டில் வைத்திருந்தால் பண கஷ்டம் வரத்தான் செய்யும். வீட்டில் வைக்கக்கூடாத குபேர பொம்மை எது, என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.